Also Watch
Read this
By: Manigandan Raja

நேபாளத்தை உருக்குலைத்த பயங்கர வெள்ளம்
நேபாளத்தை உருக்குலைத்த பயங்கர வெள்ளத்தால், காத்மாண்டு - திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவின் வீரியத்தை விளக்கும், செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.திபெத்தின் ஜிரோங் ((Gyirong)) எல்லை பகுதியில் இருந்த பிரம்மாண்ட கட்டடங்கள், ரசுவாவின் துமான், சியாப்ரு உள்ளிட்ட இடங்களில் இருந்த வீடுகள், இருந்த தடமே தெரியாத அளவுக்கு பெருவெள்ளத்தால் துடைத்தெறியப்பட்டுள்ளது.
நேபாள வெள்ளத்தில் அதிகம் பாதித்த ரசுவா மாவட்டம்
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட ரசுவா மாவட்டத்தில் உள்ள திரிசூலி நீர்மின் திட்ட சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 100க்கும் மேற்பட்டோரை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுரங்கத்திலிருந்து இதுவரை மீட்கப்பட்ட 350 பேரில் 63 பேர் இந்தியர்கள் என அந்நாட்டு ராணுவக் குழு தெரிவித்துள்ளது.

சகதி நிறைந்துள்ள சுரங்கப்பாதையில் இருந்து தொழிலாளர்களை மீட்பது சவாலாக உள்ள நிலையில், பயிற்சி பெற்ற குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved