Also Watch
Read this
By: Manigandan Raja

அணுசக்தி முடக்க ஒப்பந்தத்தை முன்னெடுக்க வேண்டும்-தென்கொரியா
அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியாவிடம் முழுமையான அணுஆயுத ஒழிப்பை வற்புறுத்துவதை நிறுத்திவிட்டு, அணுசக்தி முடக்க ஒப்பந்தத்தை முன்னெடுக்க வேண்டும் என தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் ((Lee Jae Myung)) வலியுறுத்தியுள்ளார்.
வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தற்போதைய பொருளாதாரத் தடைகள் தோல்வியடைந்துவிட்டதாகவும், அவை அந்நாட்டின் அணுஆயுத விரிவாக்கத்தைத் தடுக்கத் தவறிவிட்டன என்றும் தென்கொரியா அதிபர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் அறிமுகம்
முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மின்சார கார் மாடல்களை சவூதி அரேபியா அறிமுகம் செய்தது. சவூதியின் CEER MOTORS தயாரித்த EXOBOT SEDAN மற்றும் SUV மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஒருமுறை சார்ஜ் செய்தால் SEDAN 670 கிலோ மீட்டர் வரையும், SUV 560 கிலோ மீட்டர் வரையும் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved