news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews நேபாள வெள்ளப் பேரழிவு நிலநடுக்கம் அல்ல
tv

Also Watch

நேபாள வெள்ளப் பேரழிவு நிலநடுக்கம் அல்ல

பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நேபாள வெள்ளப் பேரழிவு

பனிப்பாறை சரிவே காரணம்- அமெரிக்க புவியியில் மையம்

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்குக்கு நிலநடுக்கம் காரணமல்ல, பனிப்பாறை சரிவே காரணம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. திபெத்திலிருந்து பாய்ந்து வரும் போதேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் நேபாள மாவட்டங்களான ரசுவா, தாடிங் மற்றும் நுவாகோட் ஆகிய பகுதிகளில் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

இந்த திடீர் வெள்ள பெருக்குக்கு நேபாள-சீன எல்லையில் ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கமே காரணம் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், லெண்டே ஆற்றில் ((Lhende River)) பனி பாறைகள் சரிந்து விழுந்து பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி உள்ளது தெரியவந்ததுள்ளது.

கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் ஒருவர் பலி, 10 பேர் காயம்

பிரான்ஸ் நாட்டின் கான் ((Caen)) நகரின் ரயில் நிலையத்திற்கு அருகே ஒருவர் தனது காரை கூட்டத்திற்குள் அதிவேகமாக ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் காயமடைந்தனர்.

மதுபான கடையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த அந்த நபர் வேண்டுமென்றே தனது காரை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரானிய உச்சத் தலைவர் கமெனி இறந்ததாக நினைக்கவில்லை

ஈரானிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமெனி இன்னும் உயிருடன் இருக்கிறார் என தாம் நம்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தாக்குதலின்போது கமெனி கடுமையாக காயம் அடைந்ததாகவும், அவரது உடலின் இடது பக்கம், கை, கால்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டாலும் அவர் இறந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை என டிரம்ப் கூறியுள்ளார்.

எல்லா விஷயங்களுக்கும் இறுதி ஆசி பெறுவதற்காக, கமெனியிடம் மீண்டும் சென்று பேசுவது போல் ஈரான் பேசுவதாகவும், ஒரு நல்ல நாடகத்தை அரங்கேற்றுவதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Link
நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Hector Tomahawk அறிமுகம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved