Also Watch
Read this
By: Manigandan Raja

பன்னாட்டு மலைப்பகுதிகள் மேம்பாட்டு அமைப்பு எச்சரிக்கை
நேபாளத்தில் மீண்டும் ஒரு பெரும் வெள்ளப்பெருக்கு ஆபத்து உள்ளதாக பன்னாட்டு மலைப்பகுதிகள் மேம்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது. ல்ஹெண்டே கோலா நதியின் மேல் பகுதியில் இன்னும் நீர்த்தேக்கம் போல அடைப்பு ஏற்பட்டுள்ளதால், எப்போது வேண்டுமானாலும் 2வது முறையாக பெரும் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்காசியாவில் நிலவும் மோதல் போக்குக்கு முடிவு
மேற்காசியாவில் நிலவும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவும் சீனாவும் முக்கியமான வகையில் உதவ முடியும் என அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்று பேச்சு, மிரட்டல்களை கைவிட்டு, ராஜீய ரீதியிலான நடவடிக்கையை பயன்படுத்த விரும்ப வேண்டும் எனவும் தெரிவித்தார்.
போதை பொருள் கடத்தல் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்
கரீபியன் கடலில் போதை பொருள் கடத்தல் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக அமெரிக்க தெற்கு படைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், தாக்குதலுக்கு உள்ளான கப்பல் போதைப்பொருள் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது உளவுத்துறை தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved