news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஜெலன்ஸ்கிக்கு அறிவுரை முதல் குழந்தைப் பருவ வீடு விற்பனை வரை
tv

Also Watch

ஜெலன்ஸ்கிக்கு அறிவுரை முதல் குழந்தைப் பருவ வீடு விற்பனை வரை

எந்த ஆட்சேபனையும் இல்லை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் டிரம்ப் பதில்

  • பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் அதிபரும், ஐக்கிய அரபு அமீரக இளவரசரும் சந்தித்தது பற்றி தனக்கு எந்தக் கவலையும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அதிபர் டிரம்ப், வளைகுடா நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார். மேலும், ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வர கடுமையாக முயற்சிப்பதாகவும், தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கான அழைப்புகளை விடுத்து வருவதாகவும், அமெரிக்காவிற்கு சாதகமான சரியான ஒப்பந்தம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்.


உக்ரைன் அதிபருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்

  • ரஷ்யாவின் டீசல் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி-க்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.



  • இதுகுறித்து பேசிய அவர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் இலக்குகளை குறிவைத்து தாக்கலாம் எனவும், ஆனால், டீசல் எரிபொருள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். ஏனெனில், எரிபொருள் மீது தாக்குதல் நடத்துவதால், டீசலுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.


அமெரிக்க அதிபர் டிரம்பின் குழந்தை பருவ வீடு விற்பனை

  • அமெரிக்க அதிபர் டிரம்ப் சிறு வயதில் வளர்ந்த வீடு 19 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில் ஜமைக்கா எஸ்டேட்ஸ் என்ற இடத்தில் டியூடர் பாணியில் இந்த வீட்டை டிரம்பின் தந்தை பிரெட் டிரம்ப் 1940-ம் ஆண்டு கட்டியுள்ளார்.


  • டிரம்ப் தனது 4 வயது வரை இந்த வீட்டில் வசித்த நிலையில், பின்னர், மற்றொரு பெரிய வீட்டுக்கு குடிபெயர்ந்ததால் இந்த வீடு பராமரிப்பின்றி கிடந்துள்ளது. இந்த வீட்டை டாமி லின் என்ற கட்டுமான தொழிலதிபர் வாங்கி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு விற்பனை செய்துள்ளார்.

Related Link
ஹார்மூஸ் நீரிணையில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்

ஹார்மூஸ் நீரிணையில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆ.ராசாவை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்

26
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved