Also Watch
Read this
By: Manigandan Raja

2023ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் வட்டி உயர்வு
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25சதவீதம் உயர்த்தியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டிற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த முதல் வட்டி உயர்வு மூலம் அமெரிக்காவின் முக்கிய வட்டி விகிதம் 3.75 முதல் 4 சதவீதம் என்ற வரம்பை எட்டியுள்ளது.
இது தங்கம் மீதான முதலீட்டு ஆர்வத்தை சற்றே குறைத்துள்ளதால், தங்கம் விலையில் லேசான சரிவு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்சிலோனாவில் பெய்த கனமழை
ஸ்பெயினின் பார்சிலோனா (Barcelona) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கடுமையான கனமழையால், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒலிவெல்லா (Olivella) என்ற இடத்தில், காரில் இருந்து வெளியேற முயன்ற பெண் ஒருவர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், வெள்ளம் சூழ்ந்த ஒரு சுரங்கப்பாதைக்குள் கார் ஒன்று சிக்கிக் கொண்ட நிலையில், அங்கிருந்த மீட்புப் படையினர் காரில் இருந்தவர்களை மீட்க தீவிரமாகப் போராடும் காட்சிகள் வெளியாகின.
சைக்கடெலிக் பாப் கலைஞர் பீட்டர் மேக்ஸ் காலமானார்
1960 -களின் நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்ந்த சைக்கடெலிக் பாப் கலைஞர் ((Psychedelic Pop))பீட்டர் மேக்ஸ், 88 வயதில் காலமானார். ஒலிம்பிக், சூப்பர் பவுல், உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு அதிகாரப்பூர்வ கலைஞராக பணியாற்றிய இவரின் படைப்புகள் போயிங் 777 விமானம் மற்றும் நார்வேஜியன் குரூஸ் லைன் கப்பல் வரை என அனைத்திலும் இடம்பெற்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved