உக்ரைனுக்கு புதிய அதிபர் வர வேண்டிய நேரம் வந்துவிட்டது
உக்ரைனுக்கு புதிய அதிபர் வர வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஜெலென்ஸ்கி உலகிற்கு பிரச்சனைகளை ஏற்படுத்த விரும்புவதாகவும், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும், போர் முடிவுக்கு வர ஒப்பந்தம் செய்யாததால், உக்ரைனுக்கு புதிய அதிபர் தேவை எனவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா டீசல் வாங்குவதற்கு ஜெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், டிரம்ப் இப்படியொரு கருத்தை கூறியுள்ளார்.
ஐசாயஸ் புயலால் புளோரிடா மாநிலத்தில் கனமழை
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஐசாயஸ் புயலால் கடும் மழைப்பொழிவு ஏற்பட்டு வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதில், 2 பேர் உயிரிழந்த நிலையில், மின்தடையால் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
ஒருசில இடங்களில் 9 அடி வரை வெள்ளம் பெருகக்கூடும் என்பதால் புளோரிடா, அலபாமா, ஜார்ஜியா ஆகிய பகுதிகளில் அவசரநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புளோரிடா, அலபாமா ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜபோரிஜியா உள்ளிட்ட 13 பகுதிகள் மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரைனின் ஜபோரிஜியா உள்ளிட்ட பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதல்களில் 3 குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஜபோரிஜியா நகரம் மற்றும் 13 பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜபோரிஜியாவில் உள்ள 5 மாடி குடியிருப்பு கட்டடம் நேரிடையாக தாக்கப்பட்டதில் இடிபாடுகளில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண ஆளுநர் மிகைலோ செமிகின் தெரிவித்துள்ளார்.