Also Watch
Read this
By: Manigandan Raja

6,000-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்பு - 16,000 பேர் காயம் :
வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. சுமார் 900 கட்டடங்கள் சேதமடைந்த நிலையில், அதில் 190 கட்டடங்கள் முழுமையாக தரைமட்டமாகியுள்ளன.
போரை முடிவுக்கு கொண்டு வர உதவுவதாக டிரம்ப் உறுதி :

ரஷ்யா-உக்ரைன் போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக சுமார் 90 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்ய-உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவும், நெருக்கடியை சமாளிப்பதற்கான தீர்வுகளை கண்டறிய தயாராக உள்ளதாகவும் டிரம்ப் உறுதியளித்ததாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.