news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பெருவெள்ளத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள்
tv

Also Watch

பெருவெள்ளத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள்

திரிசூலி நீர்மின்திட்ட சுரங்கப்பாதை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nepal flood

வெள்ளத்தில் இருந்து தப்பிய சீன தொழிலாளி பேட்டி

நேபாள பெருவெள்ளத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிய தங்களை விட்டுவிட்டு சீன மேற்பாற்வையாளர் தப்பி ஓடிவிட்டதாக தொழிலாளி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். திரிசூலி நீர்மின்திட்ட சுரங்கப்பாதையில் வெள்ளம் மற்றும் சேறு புகுந்தபோது சுமார் 265 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதிலிருந்து தப்பிய செத்ரி என்ற தொழிலாளி, வெள்ளத்தின் போது தங்களை வெளியே விடுமாறு சீன மேற்பார்வையாளரிடம் கேட்டதாகவும், அவர் நான் போய் பார்க்கிறேன் என கூறிவிட்டு தப்பியோடிவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஜெர்மனி விமான நிலையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதல்

ஜெர்மனியில் லைப்சிக் விமான நிலையத்தில் ரஷ்யா நடத்தியதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதல் சதித்திட்டத்தை அரசு ஆதரவு பயங்கரவாதம் என ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி விமான நிலையத்தில் உக்ரைன் நாட்டு விமானத்திற்கு அருகே வெடிபொருட்களுடன் கூடிய ரஷ்ய ட்ரோன் ஒன்று கண்டறியப்பட்டது.

இது குறித்து அயர்லாந்தில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாகப் பேசிய ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கலாஸ், பயங்கரவாதத்துக்கு ஆதரவான அனைத்து அறிகுறிகளும் உள்ளதாக தெரிவித்தார்.

நேபாளத்துடனான கியிரோங் எல்லைப் பகுதி

நேபாளத்துடனான கியிரோங் ((Gyirong)) எல்லைப் பகுதிக்குச் செல்லும் ஒரே சாலையானது, பேரழிவுமிக்க வெள்ளத்தால் சிதைக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு சீனாவால் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது; இதன் மூலம், பேரிடர் பாதித்த முக்கியப் பகுதிக்குக் கனரக இயந்திரங்கள் மீட்பு பணிகளுக்காக முதன்முறையாகச் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Related Link
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 163 இந்தியர்கள் மீட்பு

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 163 இந்தியர்கள் மீட்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை எளிதாகப் பெற நடவடிக்கை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved