புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் விஜய்

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 13,000 பயனாளிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
முதல்வர் விஜய்
புதுக்கோட்டையில்
Published on: 

விலையில்லா வீட்டுமனை, கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணை, கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றை முதல்வர் விஜய் பயனாளிகளுக்கு வழங்கினார்.

புதுகையில் முதல்வர் விஜய்

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் வந்து சேர்ந்த முதலமைச்சர் விஜய்; அவருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

முன்னதாக, புதுக்கோட்டை நோக்கி முதல்வர் விஜய் ரோட் ஷோ நடத்தினார். அப்போது, வழிநெடுக ஆர்ப்பரித்த மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

மனு வாங்கிய முதல்வர்

புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த பின்பு, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் முதலமைச்சர் விஜய் மேலும் அவர்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்

முதல்வர் விஜய்
புதுக்கோட்டையில் முதல்வர் விஜய்