Sanjay dutt
சினிமா
நடிகர் சஞ்சய் தத்தின் மேடை பேச்சால் சர்ச்சை
ஒற்றுமையை உணர்த்துவதை நோக்கமாகக் கொண்ட 'காந்திகிரி' போன்றது எனவும், தனது வார்த்தைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
நாட்டில் இனி அமைதியை உணரவே முடியாது
- தற்போது தேசத்தில் நடக்கும் விஷயங்களை பார்த்தால் இனி அமைதியை உணரவே முடியாது என்று தோன்றுவதாக நடிகர் சஞ்சய் தத் கூறிய கருத்து சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- தனது கருத்து அன்பு, அரவணைப்பு, ஒற்றுமையை உணர்த்துவதை நோக்கமாகக் கொண்ட 'காந்திகிரி' போன்றது எனவும், தனது வார்த்தைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா நடித்துள்ள "ரணபாலி"
- விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா இணைந்து நடிக்கும் ‘ரணபாலி’ திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 8-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அஜய் - அதுல் இசையமைக்கின்றனர்.
- படம் 5 மொழிகளில் வரும் 16-ம் தேதி வெளியாக உள்ளது.
ஏகன் நடிக்கும் "ஹைக்கூ" திரைப்படம்
- ஏகன் நடிக்கும் “ஹைக்கூ” திரைப்படத்தின் டிரெய்லர் இன்று((அக்டோபர் 6)) வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் ஹரி கூடுதல் திரைக்கதை எழுதியுள்ள இந்த படத்தை யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார்.
- சித்து குமார் இசையில், தயாரிப்பாளர்கள் டாக்டர் அருளானந்து - மேத்யூ அருளானந்து இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வரும் 23-ம் தேதி வெளியாகவுள்ளது.

