டோரதி
சினிமா
டோரதி படத்தை பாராட்டிய தனுஷ் – ‘உன்ன தொட்டு’ பாடலுக்கு வரவேற்பு
“டோரதி” திரைப்படத்தை நடிகர் தனுஷ் பாராட்டிய நிலையில், படத்தின் 3-வது பாடலான ‘உன்ன தொட்டு’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இளையராஜாவின் ருத்ரதாண்டவம் எனவும் புகழாரம்
- இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் “டோரதி” திரைப்படத்தை நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், டோரதி கார்த்திக் சுப்புராஜின் மாஸ்டர் பீஸ் எனவும், இது துணிச்சலான மற்றும் உணர்வுப்பூர்வமான படம் எனவும் பாராட்டியுள்ளார்.
- மேலும், இசைஞானி இளையராஜாவின் இசை ரசிகர்களை மிரளவைக்கும் எனவும், இது அவரது ‘ருத்ரதாண்டவம்’ என்றே சொல்லலாம் எனவும் புகழ்ந்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜின் "டோரதி" திரைப்படத்தின் 3-வது பாடல்
"டோரதி" திரைப்படத்தின் 3-வது பாடலான ‘உன்ன தொட்டு’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்த பாடல் "ஆறு அது ஆழமில்ல" மற்றும் "ஆசைய காத்துல தூதுவிட்டேன்" ஆகிய பாடல்களின் கலவையாக உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
- இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகவுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

