Mamooty
Mamooty

"வாசனை, சுவை அறியும் திறனை இழந்தேன்" - மம்மூட்டி

அந்தத் திறன்களை நாம் இழக்கும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு நமக்குத் தெரியும்
Published on: 

சுவை அறியும் திறனை இழந்தேன் : 

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி, வாசனை, சுவை அறியும் திறனை இழந்ததாக உருக்கமாக தெரிவித்தார். கொச்சியில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தை மம்மூட்டி தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் பேசிய அவர், நீண்ட காலமாக தன்னால் எந்த வாசனையையோ, எதன் சுவையையோ உணர முடியவில்லை என்று, அந்தத் திறன்களை நாம் இழக்கும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு நமக்குத் தெரியும், இப்போது மெதுவாக அதிலிருந்து மீண்டு வருவதாக கூறினார்.

newstamil.tv