மோகன்லாலின் 366வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் மோகன்லால், டி.எஸ். லவ்லஜன் எனும் காவல் துறை அதிகாரியின் கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
Mohanlal 366
Mohanlal 366
Published on: 

மோகன்லால் நடிக்கும் தனது 366 ஆவது திரைப்படத்தின் first look போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. துடரும் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நாயகனாக நடிக்கும் 366 வது திரைப்படம் உருவாகி வருகின்றது.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவாகும் இந்தப் புதிய படத்தில், நடிகை மீரா ஜாஸ்மின் நாயகியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர் மோகன்லால், டி.எஸ். லவ்லஜன் எனும் காவல் துறை அதிகாரியின் கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

newstamil.tv