Pavan kalyan movie trailer
Pavan kalyan movie trailer

பவன் கல்யாணின் ’உஸ்தாத் பகத் சிங்’ டிரைலர் வெளியீடு

‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படம் வரும் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Published on: 

’உஸ்தாத் பகத் சிங்’ டிரைலர் வெளியீடு  :

ஆந்திரா துணை முதலமைச்சர்  பவன் கல்யாண் நடித்துள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஹரிஷ் சங்கர் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக பவன் கல்யாண் நடித்துள்ளார்.

2012-ல் வெளியான ‘கப்பர் சிங்’ படத்திற்குப் பிறகு பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2-வது திரைப்படம் இதுவாகும். கதாநாயகிகளாக ஸ்ரீலீலா, ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படம் வரும் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

newstamil.tv