

அமிதாப் பச்சனுக்கு பலத்த பாதுகாப்பு வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு
நடிகர் அமிதாப் பச்சன், வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் ரசிகர்களைச் சந்தித்தார்.
மும்பையில் உள்ள தனது ஜல்சா இல்லத்திற்கு வெளியே, குண்டு துளைக்காத கண்ணாடிப் பாதுகாப்புக்குள் நின்றபடி ரசிகர்களுக்கு கையசைத்து வணக்கம் தெரிவித்தார்.
அப்போது அவரது மகன் அபிஷேக் பச்சனும் உடனிருந்தார். வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.