Tamil cinema update
சினிமா
இன்றைய சினிமா செய்திகள் 17.02.2026
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம், படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது.
"DOUBLE OCCUPANCY" :
குஷ்பு தயாரிப்பில் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகி வரும் "DOUBLE OCCUPANCY" திரைப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சாம் சி எஸ் பின்னணி இசையில் திரைப்படம் உருவாகி வருகிறது. சந்தோஷ், ரேஷ்மா, சம்யுக்தா உள்ளிட்ட இளம் நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
சேயோன் :
கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் நடிகர் சிவகார்த்திகேயனின் 26வது திரைப்படத்துக்கு, சேயோன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தாய் கிழவி திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம், படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது.

