Train
Train

விஜய் சேதுபதி நடித்துள்ள "டிரெயின்" திரைப்படம்

ஒரே இரவில் ரயிலில் நடைபெறும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள டார்க் திரில்லர் படமாகும்.
Published on: 

படத்தின் டீசர், இசை வரும் 12-ம் தேதி வெளியீடு 

விஜய் சேதுபதி நடித்துள்ள "டிரெயின்" திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் மிஷ்கின் இயக்கியுள்ள இந்த படத்தில், நடிகை ஸ்ருதி ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இயக்குநர் மிஷ்கின் இசையமைத்துள்ளார். இது ஒரே இரவில் ரயிலில் நடைபெறும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள டார்க் திரில்லர் படமாகும்.

நடிகை தமன்னா நடித்துள்ள "தி விவான்" பாலிவுட் திரைப்படம் :

நடிகை தமன்னா நடித்துள்ள "தி விவான்" பாலிவுட் திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏக்தா கபூர் தயாரிப்பில், பேண்டஸி பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தை தீபக் குமார் மிஷ்ரா இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் நாயகனாக சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். இவர்களுடன் சுனில் குரோவர், மனீஷ் பால், ஸ்வேதா திவாரி, அனுப் சோனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் பாலாஜி மோஷன் பிகசர்ஸுடன் முதல்முறையாக டிவிஎப் மோஷன் பிக்சர்ஸ் இணைகிறது.

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு சொகுசு கார் பரிசளித்த தயாரிப்பாளர் :

"கட்டா குஸ்தி - 2" திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், நடிகர் விஷ்ணு விஷாலுக்கு பிஎம்டபுள்யூ சொகுசு காரை பரிசளித்துள்ளார். இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.

நடிகர்கள் கருணாஸ், காளி வெங்கட், லிஸ்ஸி ஆண்டனி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் 3 நாள்களில் 22 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கே கணேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.

newstamil.tv