

நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தும் அடங்காமல் சுற்றி திரியும் ஜான் ஜெபராஜ் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் உயிருக்கே ஆபத்து இருப்பதாக கூறப்படும் நிலையில், மதம் பிடித்த போதகருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சமூக வலை தளங்களில்...
தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்தது போல, பார்க்க பத்து பொருத்தமும் பக்காவாக இருக்கும் இந்த மத போதகர் ஜான் ஜெபராஜை, யாரும் மறந்திருக்க முடியாது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஜான் ஜெபராஜ் என்பவர், கோவை காந்திபுரத்தில் கிங் ஜெனரேஷன் என்ற தேவாலயத்தில் மத போதகராக இருந்து வந்தார். ஜான் ஜெபராஜை, தேவாலயத்தில் பார்ப்பதை விட, இன்ஸ்டாகிராமில் தான் அதிகம் பார்க்க வேண்டும் என்ற அளவுக்கு சுமார் ஒன்னேமுக்கால் லட்சம் பாலோயர்ஸ்கள் வைத்திருக்கிறார்.
அதாவது, கிறிஸ்தவ பாடல்களை வித்தியாசமாக சினிமா வெர்சனில் பாடும் ஜான் ஜெபராஜ், சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் CONCERT கூட நடத்தியிருக்கிறார்.
போக்சோ வழக்கு
என்னமோ, கிறிஸ்தவ மதத்தின் தூதுவன் போல காட்டிக் கொண்ட ஜான் ஜெபராஜின் பாடல்களை கேட்கவே, தனி கூட்டம் கூடியது. CONCERT மூலமாக பணம் சம்பாதித்து ஜெகஜோதியாக வாழ்ந்த ஜான் ஜெபராஜ், டொனேஷன் என்ற பெயரிலும் கலெக்சன் பார்த்து வந்தார். பணத்துக்கு பஞ்சமில்லாமல் வாழ்ந்தாலும், சபல புத்தியால் மத போதகர் ஜான் ஜெபராஜ்ஜின் உண்மை முகம் அம்பலமானது.
மத போதகர் ஜான் ஜெபராஜின் மாமனார் இரண்டு ஆதரவற்ற சிறுமிகளை தத்தெடுத்து வளர்த்து வந்த நிலையில், அந்த சிறுமிகளுக்கு அடிக்கடி ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காந்திபுரம் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவானது.
இந்த வழக்கில் ஜான் ஜெபராஜ் தலைமறைவான நிலையில், கேரள மாநிலம் மூணாறு ஹோட்டலில் வைத்து கள்ளக்காதலியுடன் சிக்கினார்.
சாட்சிகளை கலைக்க முயற்சி
மூணாறு ஹோட்டலில் இருந்து அழைத்து வந்து சிறையில் அடைக்கப்பட்ட ஜான் ஜெபராஜ், ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜான் ஜெபராஜ்ஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து ஜாமீனில் வெளியே இருந்து வரும் ஜான் ஜெபராஜ், பாதிக்கப்பட்ட சிறுமிகளை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.
மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக தனக்கு எதிராகபொய்யான புகார் கொடுக்க வைத்து விட்டதாக புலம்பி வரும் ஜான் ஜெபராஜ், பாதிக்கப்பட்ட அந்த ஆதரவற்ற சிறுமிகளுக்கு பணம் தருவதாக சொல்லியும், வேலை வாங்கி கொடுப்பதாக சொல்லியும் ஆசை வார்த்தை காட்டி சாட்சியை கலைக்கப் பார்ப்பதாக கோவை மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பெயரைக் கூறி...
இதுமட்டுமல்லாமல், தேவாலயத்திலேயே கள்ளக்காதலியுடன் குடித்தனம் நடத்தி வரும் ஜான்ஜெபராஜ், சக மத போதகர்களுக்கும் சேர்த்து அவமானத்தை தேடி தருவதாக காவல் நிலையத்தை நாடியிருக்கும் அகில இந்திய திருச்சபை கூட்டமைப்பினர், ஜான் ஜெபராஜ்ஜின் ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இன்னும் ஒரு படி மேல போய், முதலமைச்சர் விஜய்யின் பெயரை பயன்படுத்தி ஜான் ஜெபராஜ் மிரட்டி வருவதாக அதிர வைத்தார் அந்த பேராயர்.
ஆதரவற்ற நிலையில் இருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பலவீனத்தை பயன்படுத்தி போக்சோ வழக்கில் இருந்து தப்பிக்க பார்க்கும் கில்லாடி மத போதகர் ஜான் ஜெபராஜின் ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைத்து சிறப்பாக கவனிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.