rajini wish
rajini wish

தூய்மைப் பணியாளரை பாராட்டிய ரஜினி

தங்கச் சங்கிலியை பரிசாக அளித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
Published on: 

சென்னை, தியாகராயர் நகரில் குப்பைத் தொட்டியில் கிடந்த 45 சவரன் தங்கத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவதியின், நேர்மையை பாராட்டி, தமது வீட்டிற்கு அழைத்து, தங்கச் சங்கிலியை பரிசாக அளித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

தூய்மை பணியாளர் பத்மா
சென்​னை, திரு​வல்​லிக்​கேணி, பிள்​ளை​யார் கோயில் தெருவைச் சேர்ந்​தவர், 48 வயதான பத்மா. தூய்​மைப் பணியாளரான இவர், தியாகராய நகரில், வண்​டிக்​காரன் பகு​தி​யில் கடந்த மாதம் 11ஆம் தேதி பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​போது, சாலை​யில் கிடந்த பையை எடுத்துப் பார்த்​துள்ளார். அதில், 45 சவரன் தங்க நகைகள் இருந்​தது. உடனே, அந்த நகைகளை பாண்​டி பஜார் காவல் நிலை​யத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசா​ரணை​யில், அந்த தங்க நகைகள் நங்​கநல்​லூரை சேர்ந்த பரமேஷ் என்பவருக்கு சொந்​த​மானது என தெரிய​வந்​தது. மீட்கப்பட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்​படைக்​கப்​பட்டது. குப்பையில் கிடந்த நகையை, போலீசாரிடன் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்​மாவுக்கு பாராட்டுக்​கள் குவிந்​தன.

முதல்வர் நேரில் பாராட்டு
இந்த தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டா​லின், தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி ரூ.1 லட்சத்​துக்​கான காசோலையை அவரிடம் வழங்​கி​னார். இதனை தொடர்ந்து, சென்னை மத்​திய கோட்​டத்​தில் முது​நிலை அஞ்​சல் கண்​காணிப்​பாளர் அலு​வல​கம் சார்பில் ‘மை ஸ்டாம்பில்’ பத்​மா​வின் ஃபோட்​டோவுடன் அஞ்​சல் தலை வெளி​யிடப்பட்டு கவுரவப்படுத்தியது.

ரஜினிகாந்த் பாராட்டு
இந்நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த், தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து பாராட்டி கவுரவித்துள்ளார். மேலும், தங்கச் சங்கிலியையும் ரஜினிகாந்த் பரிசாக, பத்மாவுக்கு அணிந்து விட்டார்.

ரஜினியின் செய்தி தொடர்பாளர் தகவல்
இதுகுறித்து, நடிகர் ரஜினியின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "முன்களப் பணியாளரான பத்மாவின் செயலை அங்கீகரித்து, அவருக்கு, நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி அணிவித்து கவுரவித்துள்ளார்,” என்று பதிவிட்டுள்ளார்.

newstamil.tv