மாவட்ட செய்திகள்
இன்றும், நாளையும் எம்எல்ஏக்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.
தவெக ஆட்சி அமைந்த பிறகு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வரும் 18ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்க உள்ளது. இதன்படி, 17ஆவது சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு வரும் இன்று ஜூன் 16 மற்றும் நாளை 17 ஆகிய இரண்டு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை புத்தாக்க பயிற்சி சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. முதல்வர் விஜய் இந்த பயிற்சியை, குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

