suside
suside

லாட்ஜில் சடலமாக கிடந்த இளைஞர்

குழந்தைகளுடன் வந்த இளம்பெண் யார்? லாட்ஜ் அறையில் நடந்தது என்ன?
Published on: 

இளம்பெண் மற்றும் 2 குழந்தைகளுடன் லாட்ஜூக்கு வந்த இளைஞர்.. 2 நாட்கள் கழித்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு இளம்பெண் சென்ற நிலையில் தனது லுங்கியில் தூக்கில் தொங்கிய கார் டிரைவர்.. இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன்? இளைஞருடன் வந்த இளம்பெண்ணும், குழந்தைகளும் யார்? இளம்பெண் இளைஞரை மட்டும் லாட்ஜிலேயே விட்டுவிட்டு சென்றது ஏன்? பின்னணி என்ன?

இளைஞருடன் தங்கி இருந்த இளம்பெண்ணிடம் விசாரணை
இளைஞரோட தான் தங்கி இருந்த ரூம் கதவு உள்பக்கமா தாழ்ப்பாள் போடப்பட்ருந்ததால பதற்றமான இளம்பெண், கத்தி சத்தம்போட்டுக்கிட்டே கதவ தட்டிருக்காங்க. ஆனா, உள்ள இருந்த இளைஞர் கதவை திறக்கவே இல்ல. அதுக்குப்பிறகு கதவை எட்டி உதைச்சி அந்த இளம்பெண்ணே கதவ உடைக்க, சத்தங்கேட்டு லாட்ஜ் ஊழியர்களும் அறைக்கு வந்துருக்காங்க. அப்போ, அந்த அறையில தங்கி இருந்த இளைஞர், ஃபேன்ல தூக்கு மாட்டி தற்கொலை செஞ்சத பாத்து அதிர்ச்சியாகிருக்காங்க. அடுத்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் குடுத்துருக்காங்க ஊழியர்கள். அதுக்குப்பிறகு அங்க வந்த போலீசார், லுங்கியில சடலமா தொங்கிட்டு இருந்த இளைஞரோட சடலத்த மீட்டதோட அந்த இளம்பெண்கிட்ட விசாரணை நடத்திருக்காங்க. அப்பதான் உயிரிழந்த இளைஞர் யாரு? அவரு ஏன் தற்கொலை பண்ணிக்கிட்டாருனு எல்லாத்துக்குமே விடை கிடைச்சது.

இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார்
அப்போ, வீட்டுக்குப்போனா உன்னைய விடமாட்டாங்க, அதனால போக வேண்டாம்னு சொல்லி கெஞ்சி அழுதுருக்காரு இளைஞர். அதுக்கு, கண்டிப்பா வருவேன், நீ என்னைய நம்புனு சொன்ன இளம்பெண் சொன்னமாதிரியே குழந்தைகளை முதல் கணவர்கிட்ட விட்டுட்டு லாட்ஜூக்கு வந்துருக்காங்க. ஆனா, அறைய உள்பக்கமா தாழ்ப்பாள் போட்ருந்த ஹரிதாஸ் இளம்பெண் வரமாட்டாங்க, தன்னைய ஏமாத்திட்டங்கனு நினைச்சி லுங்கியில தூக்கிட்டு தற்கொலை பண்ணிட்டாரு. ரொம்பநேரம் கதவ தட்டியும் திறக்காததால பதறுன இளம்பெண் கதவ உடைச்சி உள்ளபோய் பாத்தப்பதான் இளைஞர் தற்கொலை செஞ்சிக்கிட்ட விவரமே தெரிஞ்சிருக்குது. அடுத்து, வழக்குப்பதிவு செஞ்ச போலீசார் இளம்பெண்கிட்ட விசாரணை நடத்திட்டு இருக்காங்க. கள்ளக்காதலால குடும்பம் குட்டிகளை இழந்த அந்த இளம்பெண் இப்ப கள்ளக்காதலனையும் இழந்து நிக்கிறாங்க. அவசரபுத்தி ஆபத்துலதான் முடியும் அப்டிங்குறதுக்கு இந்த சம்பவம்தான் உதாரணம்...

newstamil.tv