நண்பர்களுடன் அமர்ந்து மதுஅருந்திக் கொண்டிருந்த இளைஞர். திடீரென பீர் பாட்டிலை உடைத்து இளைஞரை குத்தி கொன்றுவிட்டு தப்பியோடிய கும்பல். செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்து கொலையாளிகளை கைது செய்த போலீஸ். இளைஞர் கொலை செய்யப்பட்டது ஏன்? நடந்தது என்ன?உடலில் ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்த ஜனாநைட்டு 9.30 மணி. மந்தவெளி பகுதியில ஜனா-ங்குற இளைஞர் உடல் ஃபுல்லா காயங்களோட ரத்த வெள்ளத்துல உயிரிழந்து கிடந்துருக்காரு. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச மக்கள், போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிட்டாங்க. ஜனா உயிரிழந்தத கேட்டு பதறிப்போன அவரோட பெற்றோரும், உறவினர்களும் சம்பவ இடத்துக்கு ஓடிவந்து சடலத்த கட்டிப்பிடிச்சு அழுதுருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து ஜனாவ யாரு கொலை செஞ்சா? அவருக்கு யார் கூடயாவது பகை இருக்கா? கொலைக்கான காரணம் என்னன்னு உங்க யாருக்காச்சும் தெரியுமான்னு கேட்ருக்காங்க போலீஸ். அதுக்கு ஜனாவோட பெற்றோர், அவனோட ப்ரண்ட் சிவா தான் ஜனாவ வீட்டுக்கு வந்து கூப்டு போனான்னு சொல்லிருக்காங்க.செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்து விசாரித்த போலீஸ்அந்த வாக்குமூலத்த வச்சு போலீசார் முதல்ல சிவாவோட வீட்டுக்கு போய்ருக்காங்க. ஆனா சிவா வீட்ல இல்லை. இதனால சிவாவோட செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ணிருக்காங்க போலீஸ். அப்ப சிக்னல் அதே பகுதியில காட்டிருக்கு. இதனால சிக்னல் காட்டுன இடத்துக்கு போன போலீஸ் அங்கொரு வீட்ல பதுங்கியிருந்த சிவாவ பிடிச்சி விசாரிக்க ஆரம்பிச்சுருக்காங்க. சென்னையில் வேலை செய்து வந்த இளைஞர் ஜனாபுதுச்சேரியில உள்ள ஆத்துவாய்க்கால் பேட்டை பகுதிய சேந்த பிரபாகரன் டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டிட்டு இருக்காரு. இவருக்கு கஸ்தூரி-ங்குற மனைவியும் ஜனாங்குற மகனும் இருக்காங்க. பிகாம் பட்டதாரியான ஜனா, சென்னையில உள்ள தனியார் பேங்க்ல வேலை செஞ்சுட்டு இருந்தாரு. இவரு வேலைக்கு சரியா போகமாட்டார்னு கூறப்படுது. சில மாதங்களுக்கு முன்னாடி, விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த ஜனா அதுக்கப்புறம் சென்னைக்கு வேலைக்கு போகாம ஊர்லையே தங்கிட்டாரு.சிவா காதலித்து பெண்ணுக்கு மெஸேஜ் அனுப்பிய ஜனாஅதுக்கடுத்து வேண்டாத சேர்க்கையால மதுபோதைக்கு அடிமையாகி எந்நேரமும் மதுவே கதின்னு கிடந்துருக்காரு. எந்நேரமும் மதுபோதையில வீட்டுக்கு போற ஜனா, பெற்றோரையும், உறவினர்களையும் ஆபாச வார்த்தைகளால திட்டி டெய்லி சண்டை போட்டுக்கிட்டே இருந்துருக்காரு. அதுமட்டும் இல்லாம ஜனவோட ப்ரண்ட் சிவா அதே ஏரியாவுல உள்ள ஒரு பொண்ண காதலிச்சுட்டு இருந்துருக்காரு. அப்ப வேற ஒருத்தர் மூலமா அந்த பொண்ணோட ஃபோன் நம்பர வாங்குன ஜனா, அவங்களுக்கு அடிக்கடி மெஸேஜ் பண்ணி டார்ச்சர் பண்ணிட்டு இருந்துருக்காரு. இத தெரிஞ்சு ஆத்திரமடைஞ்ச சிவா, ஜனாவ தட்டிக் கேட்ருக்காரு. அப்ப சிவாவ போட்டு ஜனா சரமாரியா தாக்கிட்டதா கூறப்படுது. இந்த விஷயத்த கேள்விப்பட்ட நண்பர்கள் ரெண்டு பேரையும் கூப்டு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திருக்காங்க. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் பழையே மாதிரியே நட்பா பழகிருக்காங்க.நண்பன் சிவாவிடம் அடிக்கடி பிரச்னை செய்த ஜனாஆனா அடுத்த கொஞ்சம் நாட்கள்யை ஜனா மறுபடியும் நண்பர் சிவா கிட்ட அடிக்கடி மதுபோதையில பிரச்னை பண்ணிக்கிட்டே இருந்துருக்காரு. இதனால ஜனா மேல சிவாவும் அவரோட நண்பர்களும் கடும் கோபத்துல இருந்துருக்காங்க. ஜனாவ இப்படியே விட்டு வச்சா அவன், நம்ம கிட்ட பிரச்னை பண்ணிட்டே தான்இருப்பான்னு நினைச்ச சிவா, அவர கொலை பண்ண திட்டம் போட்ருக்காரு. சம்பவத்தன்னைக்கு சிவா, ஜனாவோட வீட்டுக்கு போய்ட்டு அவர திருவேணி நகர் மந்தவெளி பகுதியில உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு மதுகுடிக்க கூப்டு போய்ருக்காரு. அங்க சிவா, ஜனா, சிவாவோட ப்ரண்ட்ஸ்ன்னு எல்லாரும் ஒன்னா உட்காந்து மது குடிச்சுருக்காங்க. அப்ப ஃபுல் போதையில இருந்த ஜனா, சிவாவையும் அவனோட நண்பர்களையும் ஆபாச வார்த்தைகளால திட்டிருக்காரு.சிவா உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்த போலீஸ்இதகேட்டு கோபத்தோட உச்சத்துக்கே போன சிவாவும், அவனோட நண்பர்களும் பீர் பாட்டில்ல உடைச்சு ஜனாவோட தலையிலையே ஓங்கி அடிச்சுருக்காங்க. இதுல சம்பவ இடத்துலையே சுருண்டு விழுந்த ஜனா, ரத்த வெள்ளத்துல உயிருக்கு போராடிட்டு இருந்தாரு. ஆனா அப்பவும் ஆத்திரம் தீராத அந்த கும்பல், பீர் பாட்டில வச்சு ஜனாவ குத்திக் கொடூரமாக கொன்னுட்டு தப்பிச்சு போய்ட்டாங்க. ஆனா ஜனாவோட பெற்றோர் மூலமா கொலையாளிகள் யாருன்னு தெரிஞ்சுக்கிட்ட போலீஸ், செல்போன் நம்பர டிரேஸ் பண்ணி சிவா மற்றும் அவரோட நண்பர்கள அரெஸ்ட் பண்ணிட்டாங்க. Related Link காரில் கருகிக் கிடந்த தாய், மகள்