மாணவிகளுக்கு பா*யல் டார்ச்சர், முதுநிலை மருத்துவரின் ஆபாச லீலை

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவர் ஒருவர், மாணவிகளுக்கும், பெண் பணியாளர்களுக்கும் பாலியல் ரீதியாக தொல்லை அளிப்பதாக புகார் எழுந்துள்ளது. முதலமைச்சரே நினைத்தாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என தெனாவெட்டாகவும், தன்னை காப்பாற்ற திமுகவில் முக்கிய பிரமுகர் இருப்பதாக திமிராகவும், ஆணவத்துடன் பேசும் மருத்துவரின் ஆபாச லீலை அதிர்ச்சி தருகிறது.
திருவண்ணாமலை
அதிர்ச்சி தகவல்
Published on: 

வைரலாகும் ஆடியோ

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவர் சோஜியின் லீலை குறித்து மாணவி ஒருவர் பேசிய ஆடியோ தான், வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் குருதி - சிறுநீர் பகுப்பாய்வுத்துறையின் தலைவராக இருப்பவர் முதுநிலை மருத்துவர் சோஜி. இவர் தான் கல்லூரியில் பயிலும் மாணவிகள் மற்றும் அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளிப்பதாக புகார் எழுந்துள்ளது.

பாலியல் புகார்
மருத்துவர் சோஜி

தவறு செய்ய வசதியாக...

இதுகுறித்து பேசிய பெண் பணியாளர் ஒருவர், காலை 8 மணிக்கு கல்லூரிக்கு வந்ததும், தங்களது செல்போனை வாங்கி வைத்துக் கொள்ளும் முதுநிலை மருத்துவர் சோஜி, மாலையில் பணி முடிந்து வீடு திரும்பும் போது தான் தருவதாக குற்றம்சாட்டினார். இதனால், இடைப்பட்ட பகல் நேரத்தில் என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியாது என்கிறார் கண்ணீர் மல்க.

அரசியல் செல்வாக்காம்...

மேலும், கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் சோஜி, பெண் பணியாளர்கள் மட்டுமல்லாது கல்லூரியில் பயிலும் மாணவிகளிடமும் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். இதை கல்லூரி மாணவி ஒருவரும் ஆமோதிக்கும் வகையில் பேசினார்.

தனக்கு மிகப்பெரிய அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும், எந்த பிரச்னை என்றாலும் தன்னை காப்பாற்றி விட திமுகவில் முக்கிய புள்ளி இருப்பதாகவும், இதனால் முதலமைச்சரே நினைத்தாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என சோஜி தெனாவெட்டாக கூறுவதாகவும், ஆகவே, தாம் சொல்கிறபடிதான் கேட்டாக வேண்டும், வேறு வழியில்லை எனவும் கூறி, மாணவிகளை மிரட்டுவதாகவும் அந்த மாணவி புகார் தெரிவித்தார்.

திருவண்ணாமலை
மாணவி ஆடியோ

பெண் மருத்துவர் உதவி

மேலும், தன் மீது 20க்கும் மேற்பட்ட புகார்கள் உள்ளதாகவும், இதுவரை தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை எனவும் சோஜி திமிராக கூறி வருவதாகவும், அவருக்கு உடந்தையாக பெண் மருத்துவர் ஒருவர் உள்ளதாகவும் அந்த மாணவி குறிப்பிட்டார். சோஜியின் அத்துமீறல் குறித்து கல்லூரி முதல்வர், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் என பலரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் என வேதனையுடன் தெரிவித்தார்.

ஆகவே, மகளிர் ஆணையத்தின் உதவியை நாடி ஆடியோ வெளியிட்டு, தங்களுக்கு நீதி வேண்டி காத்திருக்கின்றனர் மாணவிகள்.

திருவண்ணாமலை
ஒரு தலைக் காதலால் நேர்ந்த கொடூரம், மாணவிக்கு நிகழ்ந்த விபரீதம்