Shanmugam
Shanmugam

தொகுதி ஒதுக்கீடு இழுபறி என நாங்கள் நினைக்கவில்லை

கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதால் ஒவ்வொரு கட்சியுடனும் பேசி தீர்வு காண கால அவகாசம் தேவைப்படும் என்பதால், அதனை தாங்கள் இழுபறியாக நினைக்கவில்லை என்றும் சண்முகம் விளக்கம் அளித்தார்.
Published on: 

தொகுதி ஒதுக்கீடு இழுபறி :

தொகுதி பங்கீடு தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் நேரடியாக சந்தித்து பேசி முடிவெடுப்பது என செயற்குழு கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரை சந்தித்த பிறகுதான் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என்பதை சொல்ல முடியும் என்று கூறினார். மேலும், கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதால் ஒவ்வொரு கட்சியுடனும் பேசி தீர்வு காண கால அவகாசம் தேவைப்படும் என்பதால், அதனை தாங்கள் இழுபறியாக நினைக்கவில்லை என்றும் சண்முகம் விளக்கம் அளித்தார்.

newstamil.tv