காற்று மாசு, தூசி மாசுபாட்டை கட்டுப்படுத்த ஆலோசனை

கட்டுமான நிறுவனங்கள் திறந்தவெளிகளில் தூசி தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகக் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டது.
Delhi air pollution
Delhi air pollution
Published on: 

காற்று தர மேலாண்மை ஆணையம் டெல்லி அரசு ஆலோசனை

  • டெல்லியில் காற்று மாசு மற்றும் தூசி மாசுபாட்டை கட்டுப்படுத்த, காற்றுத் தரம் மேலாண்மை ஆணையம் டெல்லி அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. காற்றின் தரம் மோசமடைந்ததை தொடர்ந்து, GRAP-1 அமல்படுத்தப்பட்டு உள்ளது. கட்டுமான நிறுவனங்கள் திறந்தவெளிகளில் தூசி தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகக் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டது.

தசரா விழா ஊர்வலத்தின்போது மிரண்டு ஓடிய யானை

  • கர்நாடக மாநிலம் சிவமோகாவில் நடைபெற்ற தசாரா விழா ஊர்வலத்தின்போது யானை ஒன்று மிரண்டு ஓடிய வீடியோ வெளியாகி உள்ளது. இதில், யானையின் மீது சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை வைக்கப்பட்டிருந்த 650 கிலோ எடையுள்ள வெள்ளி அம்பாரி கீழே சரிந்து விழுந்தது. இதனால், ஊர்வலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

டிரோன்களைப் பயன்படுத்தி கின்னஸ் உலக சாதனை

  • கர்நாடக மாநிலம் மைசூரு தசரா விழால், வானில் 3,473 ட்ரோன்களை பயன்படுத்தி மயில் உருவம் உருவாக்கப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள் மூலம் வானில் உருவாக்கப்பட்ட பறவையின் மிகப்பெரிய வான்வழிக் காட்சியாக இந்த நிகழ்வு உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
newstamil.tv