

ஒலி மாசுபாட்டைத் தடுக்க அதிரடி நடவடிக்கை புல்டோசர் மூலம் சட்டவிரோத சைலன்சர்களை அழித்த அமைச்சர்
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில், ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட இருசக்கர வாகன சைலன்சர்கள் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டன.
சிலிகுரி போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில அமைச்சர் டாக்டர் சங்கர் கோஷ் பங்கேற்று, பறிமுதல் செய்யப்பட்ட சைலன்சர்களை புல்டோசர் இயக்கி அழித்தார்.