

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவைத் தங்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை இந்திய அரசுக்கு வங்கதேசம் முறைப்படி கோரிக்கை விடுப்பு
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவைத் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி, இந்திய அரசிடம் வங்கதேசம் முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது.
ஷேக் ஹசீனா தண்டனை பெற்ற குற்றவாளி எனத் தெரிவித்த
அந்நாட்டு சட்டத்துறை அமைச்சர் முகமது ஆசாதுஸ்ஸமான், அவரைச் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் மீண்டும் வங்கதேசத்திற்கு அழைத்து வரத் தொடர்ந்து முயற்சிப்போம் என்றார்.