

இண்டிகோ விமானத்துக்கு நடுவானில் கடத்தல் மிரட்டல்
மீண்டும் பெங்களூருவுக்கே திருப்பி விடப்பட்டு தரையிறக்கம்
பெங்களூருவில் இருந்து லக்னோ நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு நடுவானில் கடத்தல் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, விமானம் அவசரமாக மீண்டும் பெங்களூருவுக்கே திருப்பிவிடப்பட்டு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.