Delhi (1)
இந்தியா
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பம் பதிவு
வரும் நாட்களில் வெப்ப அலை (Heatwave) தொடர வாய்ப்புள்ளதால் மக்கள் கவனமாக இருக்குமாறும், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவுறுத்தியுள்ளது
அதிக வெப்பம் பதிவு :
டெல்லியில், 2026 மார்ச் முதல் வாரத்தில், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. சஃப்தர்ஜங் ((Safdarjung))வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 35 புள்ளி 7 டிகிரி செல்சியசாக பதிவானது.
வடமேற்கு இந்தியாவின் பிற பகுதிகளிலும் வெப்பநிலை அதிகரித்து, கடும் கோடை நிலவுகிறது. பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்ப மயமாதல் காரணமாக வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், வரும் நாட்களில் வெப்ப அலை ((Heatwave)) தொடர வாய்ப்புள்ளதால் மக்கள் கவனமாக இருக்குமாறும், இந்திய வானிலை ஆய்வு மையம் ((IMD)) அறிவுறுத்தியுள்ளது.

