

சோனியா காந்தியின் சுயசரிதையில் முக்கிய தகவல் முதல் குழந்தையை இழந்த துயரத்தை பகிர்ந்த சோனியா பண்ணை வீட்டிற்குள் அடக்கம் செய்யப்பட்டதாக தகவல்
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது சுயசரிதை புத்தகமான Belonging: A Journey of Love என்ற புத்தகத்தில், தனது முதல் குழந்தையை இழந்த துயர சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
1969ஆம் ஆண்டு பிறந்து ஒரே நாளில் குழந்தை உயிரிழந்ததாகவும், குழந்தையின் உடலை வழக்கப்படி ஆற்றில் வீச மறுப்பு தெரிவித்து டெல்லியின் மெஹ்ரௌலி (Mehrauli) பகுதியில் உள்ள பெரோஸ் காந்தியின் பண்ணை வீட்டிற்குள் குழந்தை அடக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.