

ராஷ்பால் குமார் மற்றும் பாபி சந்த் ஆகியோர் ராணுவத்துடன் இணைந்து தச்சன்-மார்வா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, டெர்னா காவல் நிலையத்திற்கு செல்லும் வழியில் மாயமானவர்கள், துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தை சி.ஆர்.பி.எஃப்., ஐ.ஜி மற்றும் டி.ஐ.ஜி., ஜாவேத் இக்பால் மட்டூ ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
புதன்கிழமை சி.ஆர்.பி.எஃப்., முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, பயங்கரவாதிகளை பிடிக்க அப்பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில், சர்வதேச எல்லைக்கு அருகில் பாகிஸ்தானைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் ட்ரோன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
சர்வதேச எல்லையிலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள லால்பம்கிமா (Lalfamkima) எல்லைப் புறக்காவல் நிலையப் பகுதியில் விளைநிலம் ஒன்றில் எல்லை பாதுகாப்புப் படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.