Congress
Congress

மேற்கு ஆசிய போரில் மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான்

அதன் பிறகான பாகிஸ்தானின் ராஜதந்திர அணுகுமுறை மற்றும் பிரச்சார உத்திகள் மோடி அரசை விட சிறப்பாக இருந்ததாகவும், அதன் மூலம் அந்நாட்டுக்கு புதிய வாழ்வு பிறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Published on: 

மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான் :

மேற்கு ஆசிய போரில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்வதாக வரும் செய்திகள், தன்னைத் தானே விஸ்வகுரு என தம்பட்டம் அடித்து கொள்ளும் பிரதமர் மோடிக்கு பெரும் பின்னடைவு என காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

ஈரான் - இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் செய்யும் குழுவில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளதாக வரும் செய்திகள் உண்மையானால், இந்தியா நிராகரிக்கப்பட்டுள்ளதாகவே அர்த்தம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆபரேஷன் சிந்தூரில் நமது ராணுவம் மறுக்க முடியாத வெற்றியை பெற்ற போதிலும், அதன் பிறகான பாகிஸ்தானின் ராஜதந்திர அணுகுமுறை மற்றும் பிரச்சார உத்திகள் மோடி அரசை விட சிறப்பாக இருந்ததாகவும், அதன் மூலம் அந்நாட்டுக்கு புதிய வாழ்வு பிறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

newstamil.tv