news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news பெட்ரோல், டீசல், எரிவாயு, உரங்கள் விநியோகம் பாதிப்பு
tv

Also Watch

tv

Read this

பெட்ரோல், டீசல், எரிவாயு, உரங்கள் விநியோகம் பாதிப்பு

அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு

19

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
pm modi speech in parli

உலகம் முழுவதும், எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள மேற்காசியப் போரால், இந்தியாவின் வர்த்தக பாதைகளுக்கு பாதிப்பு என்றும், பெட்ரோல், டீசல், எரிவாயு, உரங்கள் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் மாநிலங்களவையில் பிரதமர் மோடி விளக்கம் அளித்து உள்ளார்.

இந்தியர்கள் குறித்து கவலை
இதுதொடர்பாக, மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியதாவது;
வளை​குடா நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்​தி​யர்​கள் வசிக்​கின்​றனர். அவர்​களின் பாது​காப்​பில் மத்​திய அரசு மிகுந்த அக்​கறை கொண்​டிருக்​கிறது. பல்​வேறு நாடு​களின் சரக்கு கப்பல்களில் இந்​தி​யர்​கள் பெரும்​பான்​மை​யாக பணியாற்றி வருகின்றனர். வளைகுடா நாடுகளில் பணியாற்றும் ஒரு கோடி இந்தியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது இந்தியாவின் முதன்மையான கவலை. ஹோர்முஸ் நீரிணையில் பல கப்பல்கள் சிக்கியிருப்பதும் அதில் உள்ள இந்திய பணியாளர்கள் குறித்தும் கவலை ஏற்பட்டு உள்ளது. ஹோர்முஸ் நீரிணையை கடந்து, கப்பல்கள் வருவது சவாலாக இருந்தாலும், பேச்சு வார்த்தை, தூதரக உறவு மூலம் வழி ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

வெளிநாட்டுக் கப்பல்களை நம்பியிருக்கும் நிலை
இந்தியாவின் வர்த்தகத்தில் 90 சதவீதம் வெளிநாட்டுக் கப்பல்கள் மூலமே நடைபெறுவது பிரச்சனையின் தீவிரத்தை அதிகமாக்குகிறது. 70 ஆயிரம் கோடி ரூபாயில் வர்த்தக கப்பல்கள் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. மேற்கு ஆசி​யா​வின் தற்​போதைய நிலை மிகுந்த கவலை​ தருகிறது. 3 வாரங்​களுக்​கும் மேலாக பிரச்சினை நீடிக்​கிறது. இதனால் சர்​வ​தேச பொருளாதாரம் மிக கடுமை​யாக பாதிக்​கப்​பட்டு உள்ளது. தற்​போதைய போரால் நமது நாட்​டில் பல்​வேறு சவால்​கள் எழுந்​து உள்​ளன.

சீரான விநியோகம்
தற்போதைய இக்​கட்​டான காலத்​தி​லும் பெட்​ரோல், டீசல், காஸ் விநி​யோகம் சீராக நடை​பெற்று வரு​கிறது. இந்தியாவின் சமையல் காஸ் தேவை​யில் 60 சதவீதம் வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. உள்​நாட்​டில் சமையல் காஸ் உற்பத்தி அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது. நாடு முழு​வதும் பெட்​ரோல், டீசல், சமையல் காஸ், உரம் தட்​டுப்​பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு உள்ளது.

கச்சா எண்​ணெய், எல்​என்​ஜி, எல்​பிஜி ஆகியவை முன்பு 27 நாடு​களில் இருந்து கொள்​முதல் செய்யப்பட்டது. தற்​போது 41 நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்யப்​படு​கிறது. நமது நாட்​டில் 53 லட்​சம் மெட்​ரிக் டன் கச்சா எண்​ணெய் இருப்பு உள்​ளது. இதனை 65 மெட்​ரிக் டன்​னாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு​கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விவாதிக்க, நாளை மார்ச் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. உலகளாவிய மற்றும் பிராந்திய அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தற்காப்பு தயார் நிலையை ஆய்வு செய்வதற்காக, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முப்படைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், விமானப் படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, டிஆர்டிஓ அமைப்பின் தலைவர் சமீர் காமத் கலந்து கொண்டனர். இந்த நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
10 hrs 34 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved