தமிழ்நாடு

இடஒதுக்கீடு அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும்..முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் இரண்டாவது தேசிய மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு பேசிய அவர், சமூகநீதி பேசும் இடத்தில் நிச்சயமாக நான் இருப்பேன் என்ற அடிப்படையில் தான் பங்கெடுத்து உரையாற்றுவதாக குறிப்பிட்டார். சமூக நீதி, மதச்சார்பற்ற அரசியல், சமதர்மம், சமத்துவம், மாநில சுயாட்சி, கூட்டாட்சிக் கருத்தியல் ஆகியவை உயிர்வாழும் இந்தியாவே, இணையற்ற இந்தியா என்றும் தெரிவித்தார். மேலும் இடஒதுக்கீடு மாநிலங்களின் உரிமை என்று அதிகாரத்தை மாற்றி வழங்கினால் தான், அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு உரிய இடஒதுக்கீட்டினை வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.

00 Comments

Leave a comment