தமிழ்நாடு

பெண்கள் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்று நினைப்பவர் முதல்வர்

பெண்கள் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்று நினைப்பவர் முதல்வர்

பெண்கள் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்று நினைப்பவர் தான் நம் முதல்வர்
என்று சங்ககிரியில் நடைப்பெற்ற நான் முதல்வன் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி
துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார் ...
சேலம் மாவட்டம் சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரியும், தமிழக
பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து தமிழக முதலமைச்சரின் கனவு திட்டமான *நான்
முதல்வன்* திட்டத்தின் கீழ் +2 மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
அக்கல்லூரியின் தாளாளர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு
அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழக முதலமைச்சரின் நான் முதல்வன் நிகழ்ச்சியை
குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது தமிழக முதலமைச்சரின் கனவுத் திட்டம் தான் நான்
முதல்வன் திட்டம் என்றும், +2 மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியில்
சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 7800 அரசு பள்ளி மாணவிகள்
பங்கேற்று உள்ளதாகவும், இந்தியாவில் முனைவர் பட்டம் படிக்கும் 18 ஆயிரம்
நபர்களில் 13 ஆயிரம் பேர் பெண்கள் என்றும் அதிலும் 5 ஆயிரம் பேர் தமிழகத்தைச்
சேர்ந்தவர்கள் என்றும், பெண்கள் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்று
நினைப்பவர் தான் நம் தமிழகத்தின் முதல்வர் என்றும் கூறினார். மேலும் அரசு
பள்ளியில் பயிலும் மாணவிகள் வறுமைக்காக படிப்பவர்கள் அல்ல பெருமைக்காக
படிப்பவர்கள் என மாணவிகளை உற்சாகப்படுத்தி மாணவிகள் நன்றாக பயின்று
புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற்று உயர்கல்வி பயில வேண்டும் எனவும்
கேட்டுக்கொண்டார். அப்போது அரசு பள்ளி மாணவிகள்,ஆசிரியர் ஆசிரியைகள் என 8
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன் பெற்றுச் சென்றனர்...

00 Comments

Leave a comment