புதிய பாதையில் அண்ணாமலை, அதிரடி அறிவிப்பு
புதிய பாதையில் அண்ணாமலை, அதிரடி அறிவிப்பு

புதிய பாதையில் அண்ணாமலை, அதிரடி அறிவிப்பு

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை, காணொலி வாயிலாக வெளியிட்டார்.
Published on: 

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை, காணொலி வாயிலாக வெளியிட்டார்.

18 மாத காலம் அதிருப்தி - அண்ணாமலை
இதுதொடர்பாக, காணொலியில் பேசிய அண்ணாமலை கூறியதாவது;
18 மாத காலமாக எனது அதிருப்தியை தலைமையிடம் வெளிப்படுத்தி வந்தேன். எனது சிந்தனைகள் தலைமைக்கு பாரமாக இருக்க கூடாது என நினைக்கிறேன். தமிழ்நாடு அரசியல் சார்ந்த விவகாரங்களில் தேசிய தலைமையுடன் ஒத்துப்போகவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் தேசிய கட்சிகள் பேசவில்லை. கட்சிக்குள்ளும், வெளியேயும் பல தடைகளை தாண்டி வந்துள்ளேன்.

புதிய அரசியல் இயக்கம்
புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன். 18 ஆண்டுகளாக புதிய பாதையை உருவாக்க போராடி கொண்டிருக்கிறேன். பாஜகவில் இருந்தபோது ஒருபோதும் நான் தமிழகத்தின் நலனை விட்டுக் கொடுத்ததில்லை.

பாரம்பாிய தமிழன் நான்

தமிழ்நாட்டின் அடையாளத்தை ஒருபோதும் நான் விட்டு கொடுத்தது கிடையாது. தமிழனா? இந்தியனா? என்று என்னை பலரும் கேள்வி கேட்பர், பெருமை மிகு இந்தியன் நான், பாரம்பரிய தமிழன் நான், இந்தியன் என்கின்ற அடையாளத்துடன் பெருமை மிகு தமிழனாகவே நான் இருக்கிறேன்.

ஓராண்டாகவே சொல்லி வருகிறேன்
தமிழகத்தின் அடையாளம் பாஜகவில் இருக்க வேண்டும் என்று சொல்லியே உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவற்றை சந்திக்க அறிவுறுத்தினேன். மீத்தேன், நிலக்கரி சுரங்கம், மேகதாது உள்ளிட்ட அனைத்திலும் தமிழக உாிமையை விட்டுக் கொடுத்தது கிடையாது. பிரதமர் மோடி மீது பெருமை வைத்துள்ள மனிதன் நான், அவருக்கு நான் பிரச்சனையாக இருக்கக் கூடாது என கருதுகிறேன். ஓராண்டாகவே எனது கருத்து வேறுபாட்டை பாஜக தலைவர்களிடம் கூறி வருகிறேன். தேர்தல் பணி முடித்துவிட்டு செல்லுமாறு கட்சி அறிவுறுத்தியதால் தான் இவ்வளவு நாள் தொடர்ந்தேன்.

காமன் மேன் பாலிடிக்ஸ்

அரசியல் இயக்கமாக உருவாக்க வேண்டும் என்று நினைத்தபோது முதலில் நல்லகண்ணு ஐயாவை சந்தித்து வாழ்த்து பெற்றேன். எல்லா நிறுவன மேலிடத்திலும் தமிழன் இருக்கிறான், அவர்கள் அனைவரும் நமது இயக்கத்தில் பங்களிக்க வேண்டுமென்பதே என் ஆசை. வளர்ந்த பாரதம் இருக்கும் போது முதன்மை மாநிலமாக தமிழகத்தை நிறுத்த வேண்டும்
கல்ட் அரசியலில் இருந்து வெளிவந்து காமன் மேன் பாலிடிக்ஸ் கொண்டுவர வேண்டும் என்பதே என் ஆசை.

"We the Leader"
எனது இயக்கத்தில் சேர www.wetheleader.org என்ற இணையத்தின் மூலம் இணையலாம். தமிழ்நாட்டில் அடுத்து நடைபெறும் பொதுத்தோ்தலில் போட்டியிடுவேன். அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியலை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை வீடியோவில் பேசி உள்ளார்.

newstamil.tv