கர்நாடக முதல்வரை பார்த்து பயமா?
கர்நாடக முதல்வரை பார்த்து பயமா?

கர்நாடக முதல்வரை பார்த்து பயமா?

கர்நாடகத்துடன் கூட்டு சேர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் செயலுக்குத் துணை போகிறாரா முதல்வர் விஜய்? என்றும் விமர்சித்துள்ளார்.
Published on: 

மேகதாது அணை அமைய உள்ள இடத்தை மத்திய நிபுணர் குழு நேரில் ஆய்வு செய்ததாக கர்நாடகா முதல்வர் தெரிவித்துள்ளதை தமிழக முதல்வர் அறிவாரா? என இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார். கர்நாடகத்துடன் கூட்டு சேர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் செயலுக்குத் துணை போகிறாரா முதல்வர் விஜய்? என்றும் விமர்சித்துள்ளார்.

சிவகுமார் பதிவுக்கு கண்டனம்
இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;
கர்நாடக முதல்வரை பார்த்து பயமா? தனக்கு தானே பட்டம் சூட்டி கொண்ட ’தாய்மாமா’ என்ன செய்யப் போகிறார்? மேகதாது அணை அமைய உள்ள இடத்தை மத்திய அரசின் நிபுணர் குழு நேரில் பார்த்து ஆய்வு செய்துள்ளதாக கர்நாடகா முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இதுகுறித்து இன்னமும் தமிழக அரசு சார்பில் எந்த செய்தியும் வரவில்லை.

முதல்வர் அறிவாரா?
கர்நாடகத்துடன் தமிழக அரசு கூட்டு சேர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் செயலுக்குத் துணை போகிறதா? என்ற கேள்வி மக்களிடத்தில் எழுகிறது. மேகதாது அணை கட்டுமான அனுமதி கேட்டு கர்நாடக முதலமைச்சர் சிவகுமார், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்துப் பேசியிருப்பதும் சந்தேகத்தை உண்டாக்குகிறது. தமிழகம், புதுச்சேரி ஒப்புதல் இல்லாமல் புதிய அணையோ, நீர் தேக்கமோ கட்ட இயலாது என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தை முதல்வர் அறிவாரா?

கடும் கண்டனம்
தண்ணீர் திறப்புக்கும் வாய் திறக்கவில்லை. அணை கட்ட தடுப்பதற்கு வாய் திறக்கவில்லை. கர்நாடக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசுக்கும் ரீல் முதல்வருக்கும் கடுமையான கண்டனம். உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

newstamil.tv