தமிழ்நாடு

பாஜக ஆட்சிக்கு வந்தால் காவலர்களின் ஊதியம் இரட்டிப்பாக்கப்படும்

 பாஜக ஆட்சிக்கு வந்தால் காவலர்களின் ஊதியம் இரட்டிப்பாக்கப்படும்

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த இரண்டு
தினங்களுக்கு முன்பு கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலை, செங்கம்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் என் மண்
என் மக்கள் பாதையாத்திரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முடித்துக் கொண்டு இன்று
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 182 வது தொகுதியாக போளூர் சட்டமன்ற தொகுதியில்
உரையாற்றி விட்டு 183 வது சட்டமன்ற தொகுதியாக ஆரணியில் அண்ணாமலை உரையாற்றினார்.

70 ஆண்டுகள் புகழ்மிக்க ஆரணி நகராட்சியில் சரியான மின் விளக்குகள் கூட இல்லாத
நிலை இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்துறையில் பொதுமக்கள்
மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் குற்றச்சாட்டு.....

**பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் எந்த ஊரை பற்றியும் மூன்று முறை
பேசியதில்லை ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை பற்றி மூன்று முறை
உரையாற்றி இருக்கிறார் பெருமிதத்தோடு பேசிய அண்ணாமலை......**

**மன்கி பாத் நிகழ்ச்சியில் ஆரணியை பற்றி மூன்று முறை பேசிய பாரதப் பிரதமர் என
தெரிவித்த அண்ணாமலை**

மத்திய அரசின் மூலம் 18 கோடி பேருக்கு 300 ரூபாய் மானியத்தின் மூலம்
பயன்பெற்று வருகின்றனர் என்றும்

இந்தியா முழுவதும் ஒரு ஆண்டிற்கு 8.5 லட்சம் கோடி ரூபாய் வங்கி கணக்கிற்கு
அனுப்பப்படுவதாகவும்.

பாரத பிரதமர் மோடி நாட்டின் கட்டமைப்பை மாற்றி இருக்கிறார் என்று கூறியவர்.

இந்திய நாட்டில் செய்தித்தாள்களில் கூட அவர்கள் செய்த உதவிகள் பற்றி வெளியே
வராதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி வருவதாகவும்.

**பத்ம ஸ்ரீ விருதை, மக்கள் பத்மஸ்ரீ விருதாக பாரத பிரதமர் மாற்றி இருப்பதாக
பேசிய அண்ணாமலை**

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடிப்படை அரசியலில் நேர்மையையும் நாணயத்தையும்
கொண்டு வந்திருப்பதாக பேசியவர்.

ஊழல் இல்லாத அரசாங்க கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்று வருவதாகவும் 40 கோடி
லட்சம் பட்ஜெட் போடும் அரசாங்கமாகவும் கடந்த 10 ஆண்டுகளில் 400 கோடி லட்சம்
பட்ஜெட்டை போட்டிருப்பதாக தெரிவித்தவர்.

தமிழக அரசின் ஓராண்டின் பட்ஜெட் 3.5 லட்சம் கோடி பட்ஜெட்டை செய்கிறார்கள்.

*மத்திய அரசின் 400 கோடி லட்சம் பட்ஜெட்டில் ஒரு ரூபாயை கூட ஊழல்
குற்றச்சாட்டு வைக்க முடியாது என பெருமிதத்தோடு பேசிய அண்ணாமலை...,*

*ராமர் கோவிலை ஒருபோதும் பாஜக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கட்டவில்லை என
பேசிய அண்ணாமலை.......*

*2019-ல் பாராளுமன்றத்தில் 303 எம்பிக்கள் பாஜகவிடம் இருந்தார்கள் அப்போது
ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சட்ட மசோதாவை கொண்டு வந்து ராமர் கோவிலை
கட்டவில்லை......*

*அனைத்து சமூகத்தினரையும் அழைத்து தான் அந்த கோவிலை கட்டினோம் பூமி பூஜை
போடும்போது முதல் அழைப்பிதழ் இஸ்லாமிய சகோதரருக்கு தான் கொடுக்கப்பட்டதாக
பேசிய அண்ணாமலை .....*

*ஆட்டோ ஓட்டுனர் முதல் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை மக்களும் கொடுத்த
பணத்தினால் கட்டப்பட்டது ராமர் கோவில்.....*

*நம் ஜனநாயகம் சரியில்லாமல் போவதற்கு காரணம் குடும்ப ஆட்சி எப்போது வருகிறதோ
அப்போது ஜனநாயகம் சீர் அழிந்து விடும் என பேசிய அண்ணாமலை......*

**முதல்வராக வரக்கூடியவர்கள் ஒரு பேனாவை எடுத்து கையெழுத்தை போடுவதற்கு
முன்பாக அந்த கையெழுத்தால் என்ன கஷ்டம் வரும் என்பதை உணர்ந்து போடக்
கூடியவர்கள் தான் முதல்வராக வர வேண்டும் காமராஜர் எம்ஜிஆர் ராஜாஜி ஓமந்தூரார்
இவர்களெல்லாம் நேர்மையானவர்கள் இவர்கள் எல்லாம் யோசித்து கையெழுத்தை
இடக்கூடியவர்கள்**

கடந்த 50,60 வருடங்களாக குடும்ப ஆட்சியாக செயல்பட்டு வருகிறது,

**குடும்ப ஆட்சியில் முதல்வராக வரக்கூடியவர்கள் எந்த சாமர்த்தியமும் அறிவும்
இல்லாமல் வரக்கூடியவர்கள் அவர்களுக்கு அருகில் வைத்துக் கொள்ளக் கூடியவர்களை
எந்த சாமர்த்தியமும் அறிவும் இல்லாதவர்களையே வைத்துக் கொள்வார்கள் என தேசிய
அண்ணாமலை தொடர்ந்து பேசுகையில்**

**ஒரு முட்டாள் தன்னை அறிவாளியாக காட்டிக் கொள்ள தனது பக்கத்தில் ஒரு அடி
முட்டாளை வைத்துக் கொள்வான் அடி முட்டாளை முட்டாள் பேச வைக்கும் போது
அறிவாளியாக தெரிவான் என பேசிய அண்ணாமலை**

*தமிழகத்தில் நடைபெறும் குடும்ப ஆட்சி என்பது ஏதோ கோபாலபுரத்தில் வந்தது என்று
நினைக்க வேண்டாம் தமிழகம் முழுவதும் கரையானை போல் தொற்றிக் கொண்டுள்ளதாக பேசிய
அண்ணாமலை........*

*தமிழகத்தில் தாய்மொழியில் சுமார் 55 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறவில்லை
இந்தியாவில் எந்த பகுதியில் தாய் மொழியில் இவ்வளவு பேர் தேர்ச்சி பெறாமல்
இருந்தது இல்லை என பேசிய அண்ணாமலை......*

*தமிழ் மொழியை வைத்து 70 ஆண்டு காலமாக திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் ஆட்சி
செய்து வரும் நிலையில் 2022 பத்தாம் வகுப்பு தேர்தலில் 55 ஆயிரம் மாணவ
மாணவியர் தமிழகத்தில் தாய்மொழியில் தேர்ச்சி பெறவில்லை என்பதனை பேசிய
அண்ணாமலை........*

*பாஜக ஆட்சிக்கு வரும்போது தமிழகத்தில் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளை
படிக்கும் போது அதற்கு மதிப்பெண்கள் உண்டு மற்ற மூன்று மொழிகளை படிக்கும் போது
மதிப்பெண்கள் கிடையாது என பேசிய அண்ணாமலை.......*

*பாஜக ஐந்து மொழிக் கொள்கை பற்றி இந்த யாத்திரையின் மூலம் தெரிவித்து
வருவதாகவும்.*

மக்களை மக்கள் ஆழம் போது தான் அரசாக அது செயல்பட முடியும் என பேசுய
அண்ணாமலை.....

*இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது எப்படி என்பதை பற்றி பாரத
பிரதமர் மோடியின் மாணவர்கள் பேசிக் கொண்டிருக்கிறோம் என பேசிய அண்ணாமலை......*

*நாங்கள் பேசுவதில் தவறான கருத்துக்கள் இருந்தால் அதனை மக்கள் கூறும்போது
நாங்கள் திருத்திக் கொள்ள வேண்டும் எனவும்......*

*பாஜக தற்போது விதியை விதைத்து வருகிறது அதனை ஆலமரமாக தமிழக வாக்காளர்கள்
மாற்றுவார்கள் என நம்பிக்கை உள்ளதாக பேசிய அண்ணாமலை.....*

ஆரணியில் பட்டு பூங்காவாக அமைக்கப்படும் என கைத்தறி அமைச்சர் காந்தி அவர்கள்
பேசியிருக்கிறார் ஆரணியின் மண்ணின் மைந்தர்கள் யாரும் இல்லையா நெசவாளர்கள்
இல்லையா ஏன் கலைஞரின் பெயரில் வைக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.......

திமுக ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய
வாக்குறுதிகளை மட்டும் பட்டியலிட்ட அண்ணாமலை.....

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்களுக்கு மட்டும் தனி கூட்டுறவு
அமைக்கப்படும் தனி அடையாள அட்டை வழங்கப்படும் நெசவாளர்களுக்கு தடையின்றி நூல்
கிடைக்க கொள்முதல் நிலையங்களை அமைப்போம் என்று தெரிவித்ததாகவும்.

நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்படும் 12 சதவீதம் வட்டியை
எட்டு சதவீதமாக மாற்றுவோம் என சொல்லிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற
வில்லை இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு கலைஞரின் பெயரை வைத்தால் நாங்கள்
கேட்க மாட்டோம் என பேசிய அண்ணாமலை......

*மத்திய அரசின் திட்டத்தில் எந்த ஒரு தனி மனிதரின் பெயரையும் வைக்க
மாட்டார்கள்.........*

*தங்கள் பெயரை திட்டத்திற்கு வைத்துக் கொள்வது என்பது ஒரு வியாதி என கூறிய
அண்ணாமலை.......

*திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசியல்வாதிகள் காவல்துறை அதிகாரிகளின் கைகளை
கட்டிப்போட்டு இருப்பதாகவும் காவல்துறை செயல்பட முடியாமல் ஸ்தம்பித்து போய்
இருப்பதாகவும்*

ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விடுதலை
சிறுத்தைகள் கட்சி அலுவலகமாக பயன்படுத்துவதாகவும் இது தொடர்பாக விசிகவின்
கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆய்வாளரை கிருஷ்ணமூர்த்தி என்பவரை ஒருமையில்
பேசியதை கேட்க முடிகிறது.

வீசிக வை சேர்ந்தவர்கள் காவல்துறை முன்பாக நின்று காவல் நாய்களே தைரியம்
இருந்தால் வெளியே வாங்கடா என்று பேசுகிறார்கள் தமிழக காவல்துறை சமூக விரோதிகள்
முன்பு கூனிக்குறுகி கையை கட்டிக்கொண்டு நின்றால் பெண்களுக்கு பாதுகாப்பு
யார் கொடுப்பார் எனக் கேள்வி எழுப்பிய அண்ணாமலை......

இந்தியாவில் காவல்துறையில் இருப்பது மிக மிக கடினமான ஒரு பணி அப்படிப்பட்ட
கடினமான பணியை செய்யக்கூடிய காவல்துறையினரை அவமானப்படுத்துபவர்களை கையைக்
கட்டி வேடிக்கை பார்த்தால் எப்படி என கேள்வி எழுப்பிய அண்ணாமலை......

*2026-ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் பாஜக போடும் முதல் கையெழுத்து காவல்துறையில்
பணியாற்றும் காவலர்களின் சம்பளம் இரட்டிப்பு ஆக்கப்படும் என வாக்குறுதி அளித்த
அண்ணாமலை.........**

**இரண்டாவது கையெழுத்து காவல் துறையில் எட்டு மணி நேரத்திற்கு யாரும் பணி
செய்யக்கூடாது என உத்தரவு.......**

**இந்தியாவில் தெலுங்கானாவில் காவல்துறைக்கு சம்பளம் இரட்டிப்பு ஆக்கப்பட்டு
இருக்கிறது........**

**அதேபோல் தமிழகத்தில் அதைவிட கூடுதலாக கொடுக்கப்படும் என போலீசாரை மகிழ்ச்சி
படுத்திய ஐபிஎஸ் அண்ணாமலை........**

**234 தொகுதிகளிலும் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு பிரச்சினையை பற்றி பேசி
வருவதாகவும் 183 வது தொகுதியில் காவல்துறைக்கு சம்பள இரட்டிப்பு பற்றி பேசி
இருப்பதாக தெரிவித்த அண்ணாமலை.......**

**தன்னுடைய யாத்திரையின் முடிவில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் புத்தகமாக
போடப்பட்டு வெளியிடப்படும் என தெரிவித்த அண்ணாமலை**

பாஜக 2016-ல் ஆட்சிக்கு வந்தால் முதல் ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு டாஸ்மார்க்
இருக்காது.

இரண்டாவதாண்டி அடுத்த 66 சதவீதம் டாஸ்மார்க் அகற்றப்படும் மூன்றாவது ஆண்டு
பாஜக ஆட்சியில் இருக்கும் போது முழுமையாக டாஸ்மார்க் அகற்றப்பட்டு கல்லு
கடைகள் அமுல்படுத்தப்படும்.

*கள்ளுக்கடையின் மூலம் வரும் வருவாயில் 50% விவசாயிக்கு மீதமுள்ள 50%
அரசுக்கு என தெரிவித்த அண்ணாமலை....

00 Comments

Leave a comment