தமிழ்நாடு

கார் - ரூ.26 லட்சத்தை திருடி சென்ற ஓட்டுநர்; நண்பரும் சதி திட்டத்தில் கூட்டு சேர்ந்ததால் அதிர்ச்சி

சென்னை திருவேற்காடு, வி.ஜி.என். மகாலஷ்மி நகரைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன்(60). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குழரைஞராகப் பணியாற்றி வருகிறார். மேலும் வீட்டு மனை விற்பனை தொழிலும் செய்து வருகிறார். திருமணமாகாத வெற்றிச்செல்வன் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு  திருவள்ளூர் அருகே கிளாம்பாக்கம், நேரு நகரைச் சேர்ந்த தனது  நண்பர் ஸ்ரீதர் என்பவர் கஜேந்திரன் என்பவரை கார் ஓட்டுநர் பணிக்கு சேர்த்துக்கொள்ளுமாறு கூறியிருந்ததாக தெரிகிறது. நண்பர் கூறியதால் கஜேந்திரனை  கார் ஓட்டுநராக வேலைக்கு சேர்த்துள்ளார் வெற்றிச்செல்வன் . இந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதி கார் ஓட்டுநர் கஜேந்திரனுடன் காஞ்சிபுரத்திற்கு  நிலம் விற்பதற்காக காரில் சென்று விட்டு, நள்ளிரவு வீடு
திரும்பியுள்ளார் வெற்றிசெல்வன்.  பின்னர் அன்று இரவு கஜேந்திரனும் வழக்குரைஞர் வெற்றிசெல்வன் வீட்டில் தங்கியுள்ளார். மறுநாள் காலை வழக்குரைஞர் வெற்றிச்செல்வன் எழுந்து பார்த்துபோது, ஓட்டுநர் கஜேந்திரன் இல்லை. மேலும் பூஜை அறை லாக்கரில் வைத்திருந்த ரூ.26 லட்சம் பணம் மற்றும் தனது காரும்  காணாமல் போனதைக் கண்ட வெற்றிச்செல்வம் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து திருவேற்காடு காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தலைமறைவாக இருந்த கார் ஓட்டுநர் கஜேந்திரன்  கைது செய்யப்பட்டார்.  மேலும், தான் திருடிய பணத்தில்,  ரூ.5 லட்சத்தை  ஸ்ரீதருக்கு கொடுத்ததாகவும் கூறினார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் வெற்றிச்செல்வனின் நண்பர் ஸ்ரீதரையும் போலீசார் கைது செய்தனர் .  பணம் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர். 

00 Comments

Leave a comment