தமிழ்நாடு

நான் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளை - அமைச்சர் உதயநிதி

நான் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளை - அமைச்சர் உதயநிதி

 

*வாழும் பெரியார், இளைய கலைஞர், சின்னவர் என எனக்கு பட்டப்பெயர் வைத்து அழைப்பதில் உடன்பாடில்லை. அப்படி அழைக்க வேண்டாம். நான் உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக இருக்கவே ஆசைப்படுகிறேன்....

*இன்றைக்கு 1.16 கோடி மகளிர்க்கு மாதம் 1000 வழங்கப்படுகிறது. உதவி தொகை விடுபட்டவர்கள் பட்டியலை தயவு செய்து மாவட்ட செயலாளரிடம் கொடுத்து விடுங்கள். தகுதியான மகளிர்க்கு 1000 ரூபாய் வழங்க முழு பணிகளில் நாங்கள் ஈடுபடுவோம்....

*இந்த தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம். வெற்றி பெறுவோம்...

பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு...

*நாடாளுமன்ற தேர்தலில் பாஜக என்ற அசுர கூட்டத்தையும், அடிமை சாசனத்தை எழுதி வைத்த எடப்பாடி பழனிச்சாமியை அழிக்க வந்திருக்கும் முதலமைச்சரின் தளபதி வீரபாகுவாக இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்...

நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் சேகர் பாபு பேச்சு...


சென்னை கிழக்கு மாவட்ட திமுக - மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியின் பாகநிலை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் சேகர் பாபு,
இந்த மேடையை பார்க்கும் போது, கலைஞர் காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும் இந்த மேடையில் இருக்கிறார். பதவியை விட கொள்கை தான் திமுகவிற்கு பெரிது.
நான் இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சராக இருப்பதால், முருகன் அசுரனை அழிக்கும் பணியை வீரபாகுவிடம் ஒப்படைத்தார். அது போல நாடாளுமன்ற தேர்தலில் பாஜக என்ற அசுர கூட்டத்தையும், அடிமை சாசனத்தை எழுதி வைத்த எடப்பாடி பழனிச்சாமியை அழிக்க வந்திருக்கும் முதலமைச்சரின் தளபதி வீரபாகுவாக இருக்கும் உதயநிதி ஸ்டாலினை வருக என வரவேற்றவர், பல கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் எதை கொள்கையாக வைப்பது என்று திக்கு முக்காடி உள்ளார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ளார். ஆனால் உள்ளூர் முதலீடு என்ற ஓட்டுகளை பெற உதயநிதி செயல்படுகிறார் எனவும், 8 கால் பாய்ச்சலில் தேர்தல் வியூகத்தை அமைத்து இருக்கிறோம்.

களத்தில் இருக்கும் எழும்பூர், வில்லிவாக்கம், துறைமுகம் தொகுதியின் பாக முகவர்களை வாக்கு வங்கியாக பார்க்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் முழுமையாக நாங்கள் நம்பி இருப்பது பாக முகவர்களை தான். களத்தில் நாம் சுதந்திரமாக விளையாடலாம். வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் எதிரிகளே இல்லாத தேர்தலாக உருவாக்க வேண்டும். நமது வெற்றியை தளபதிக்கு காணிக்கையாக்குவோம். இனி வீதிகள் தான் நம் வீடு. வாக்காளர்கள் தான் நமது உறவு என்று வெற்றி பெற வேண்டும்.


நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
அனைவருக்கும் நன்றி தெரிவித்தவர், சேலத்தில் இளைஞரணி மாநாடு நடந்தது. அதில் 7 லட்சம் பேர் கலந்து கொண்டனர். எழுச்சி மாநாடை, ஒரு வெற்றி மாநாட்டை நடத்தி காட்டி இருக்கிறோம் என்றும் நன்றியை தெரிவித்தவர், தயாநிதி மாறன் சூசமாக பேசினார். தனக்கென பாணியில், வாய்ப்பு கிடைத்தால் போட்டி போடுவேன் என்று சொன்னார். அவருக்கு வாய்ப்பு கிடைக்கா விட்டால் நீங்கள் விட்டு விடுவீர்களா? இருந்தாலும் தலைவரிடம் சொல்கிறேன். தலைவர் தான் அறிவிப்பார். யாரை அறிவித்தாலும், நாம் நினைக்க வேண்டியது, மத்திய சென்னையில் போட்டி போட போவது
கலைஞர் தான். 40 தொகுதிகளிலும் கலைஞர் தான் போட்டியிடுகிறார் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். நான் கேட்பது அதிக வாக்கு வித்தியாசம் தான். கடந்த முறை 3.5 லட்சம் வாக்குகள். இந்த முறை அதை விட அதிகமான வாக்குகள் தான் எனவும் கூறினார்.

நான் வரும் போது, பட்டப்பெயர் வைத்து கூப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழும் பெரியார், இளைய கலைஞர், சின்னவர் என எனக்கு பட்டப்பெயர் வைத்து அழைப்பதில் உடன்பாடில்லை. அப்படி அழைக்க வேண்டாம் நான் உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக இருக்கவே ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

நாளையுடன் 40 தொகுதிக்கும் ஆலோசனையை முடிக்கவுள்ளோம் எனவும் , இன்று வரை 36 தொகுதி முடித்துள்ளோம். ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் சொன்னது என்னவென்றால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றார்கள்.
நாங்கள் எவ்வளவு வேலை செய்தாலும் நாங்கள் வைத்த நம்பிக்கை பாக முகவர்கள் நீங்கள் தான்.

சேகர் பாபு துவங்கி விட்டார். அனைத்து மாவட்ட செயலாளர்களும் இதை பண்ணியாக வேண்டும் என்று சிரித்து கொண்டே கூறிய உதயநிதி ஸ்டாலின்,
பாக முகவர்கள் நீங்கள் தான் உதய சூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்ல முடியும். யார் யாரெல்லாம் ஓட்டு போடவில்லை என்பதையும், ஓட்டு வாங்குவது, ஓட்டு எண்ணுவதிலும் உங்கள் பணி தான். திமுகவின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.

மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டம். இதன் மூலம் மாதா மாதம் 900 ரூபாய் சேமிக்கிறார்கள். மேல் படிப்புக்காக மாதம் 1000 ரூபாய், நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டத்தில் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள் அதில் நானும் ஒருவன். பெற்றோர்கள் இன்றைக்கு முதல்வரை வாழ்த்தி அனுப்புகிறார்கள். நான் எந்த மாவட்டத்துக்கு போனாலும் அந்த மாவட்ட அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிடுவேன் எனவும் கூறினார்.

இன்றைக்கு 1.16 கோடி மகளிர்க்கு மாதம் 1000 வழங்கப்படுகிறது. சிறு சிறு குறைகள் பலருக்கு இருக்கும். உதவி தொகை விடுபட்டவர்கள் பட்டியலை தயவு செய்து மாவட்ட செயலாளர் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதை தலைவரிடம் சொல்லி, சரி செய்வதற்கு / தகுதியான மகளிர்க்கு 1000 ரூபாய் மாதா மாதம் வழங்க முழு பணிகளில் நாங்கள் ஈடுபடுவோம்.

பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. நம்மையும் பயமுறுத்த துவங்கி விட்டார்கள். உங்கள் உருட்டல் மிரட்டலுக்கு பயப்படாது திமுக. எதிர்த்து நிற்போம். 2019 நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றோம். 40 க்கு 39 ல் வெற்றி பெற்றோம். இப்போது ஆளுங்கட்சியாக நாம் சந்திக்கும் நாடாளுமன்ற தேர்தல் இது. நம் ஒரே எண்ணம், நாடாளுமன்ற தேர்தல் வெற்றி. அதை தலைவரிடம் கொடுக்க வேண்டும்.

7.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மத்திய அரசு செலவு செய்ததற்கு கணக்கு கிடையாது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து பேசியவர், ( உதாரணமாக ரமணா படத்தை சுட்டி காட்டியவர்) திரையில் பார்த்ததை போல இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு காப்பீடு கொடுத்திருக்கிறது. இதற்கு பதில் கேட்டால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன சொன்னார்?

உதயநிதி ஸ்டாலின் மரியாதையாக பேச வேண்டும் என்று டில்லி செய்தியாளர் சந்திப்பில் பேசியதாகவும், நீங்கள் கேட்ட மரியாதையை நாங்கள் கொடுத்து விட்டோம். நாங்கள் கேட்ட காசை எப்போது கொடுக்க போகிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினார். நாம் நினைக்கும் ஒன்றிய அரசை உட்கார வைத்து விட்டோம் என்றால் நமக்கு தேவையானதை நாம் அனைத்தும் கேட்டு பெறலாம் என்றார்.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் குடியரசு தலைவரை அழைக்கவில்லை எனவும்,
அயோத்தி ராமர் கோயில் குறித்து பேசியவர், நீங்கள் எந்த கோயில் வேண்டுமானாலும் கட்டுங்கள். திமுக எந்த மதத்துக்கும் எதிரானதல்ல. எங்களுக்கு ஒன்றே குலம் ஒருவனே தேவன். கோவில் கட்டினால் தமிழ்நாடு மக்கள் நன்றாக சாமி கும்பிடுவார்கள். ஆனால் தேர்தல் என்று வந்து விட்டால் உதய சூரியனுக்கு தான் ஓட்டு போடுவாங்க. பிறப்பால் அனைவரும் சமம். அதை தான் நான் பேசினேன்.

இங்கு அடிமைகள் கோஷ்டி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார், ஓபிஎஸ் தான் கைதாவார் என்று. அன்றே ஓபிஎஸ் சொல்கின்றார், எடப்பாடி தான் கைதாவார் என்று. எனக்கு தெரிந்து இரண்டு பேரும் ஒன்றாக தான் கைதாவார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் இரண்டு பேரும் கைதாகி சிறைக்கு போகும் போது தவழ்ந்து தவழ்ந்து போகாதீங்க என்று சிரித்து கொண்டே பேசியவர், அவங்க தலைவர் எம்ஜிஆரா இல்லை அரவிந்த் சாமியா என்று தெரியாத அளவுக்கு அதிமுக இருக்கிறது. அந்த அளவிற்கு பரிதாபமாக இருக்கிறது.

பாக முகவர்கள், மக்களுடன் மக்களாக பயணித்து அவர்கள் பிரச்சினையை கேட்டு தீர்க்க முடிந்தால் நீங்கள் தீர்த்து வையுங்கள். ஆட்சியின் திட்டங்களை ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சேருங்கள் என்றும், எங்களுக்கெல்லாம் எடுத்து காட்டாக, சூப்பர் டூப்பர் செயல் பாவுவான சேகர் பாபுவுக்கு
வாழ்த்துக்களையும், இந்த தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம். வெற்றி பெறுவோம் என்று கூறினார்.


நிகழ்ச்சி மேடையில் பேசிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,
கண்டிப்பாக தலைவர் வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வருவேன். காலை முதல் மாலை வரை கடந்த 10 நாட்களாக அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்து இருக்கிறார். ஒரு கல்லை காட்டி, தமிழ்நாட்டுக்கு மோடி அரசு வஞ்சித்து இருப்பதை காட்டினார்.

பாஜகவின் B டீமாக எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக இருக்கிறது. முதலமைச்சரின் நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதே சேகர் பாபுவின் நோக்கமாக இருப்பதாகவும் கூறியவர், வெற்றி பெற்றால் தலைக் கணம் கூடாது என்பதை தான் சொல்லுவேன். எப்படியாவது நம்மை வீழ்த்த எதிர்க் கட்சிகள் காத்திருக்கின்றனர் என்றும் கூறினார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய மாநகராட்சி மேயர் பிரியா,
இதுவரை கிழக்கு மாவட்டம் அனைத்திலும் வெற்றி பெற்றிருக்கிறது. சட்ட பேரவை தேர்தலாக இருந்தாலும் மாமன்ற உறுப்பினர் தேர்தலாக இருந்தாலும் வெற்றியை கொடுத்தது போல் நாடாளுமன்ற தேர்தலிலும் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற, ஒவ்வொரு பாக முகவர்களும், பொது மக்களை ஒருங்கிணைத்து தேர்தல் களத்தில் பணி செய்ய வேண்டும். என்றும் தளபதியின் ( முதலமைச்சரின் ) கைகள் ஓங்கி இருக்க பாடுபடுவோம் என்று கூறினார்.

00 Comments

Leave a comment