Big Stories

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பளிக்கிறது

ஆன் லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளில் நாளை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

ஆன் லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.

வழக்கில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், இந்த சட்டத்தை இயற்ற தமிழக் அரசுக்கு அதிகாரமில்லை எனவும், திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக கருத முடியாது என ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

ஆனால், இந்த சட்ட கொண்டு வர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், தற்கொலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அரசுத்தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.



இந்த வழக்குகளில், மனுதாரர்கள் தரப்பிலும், அரசுத்தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டதை செப்டம்பர் மாதம் 13ம் தேதி வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்குகளில் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து வழக்கு   சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பளிக்கிறது

00 Comments

Leave a comment