Also Watch
Read this
By: Manigandan Raja

இன்டர்சிட்டி ரயில் நிரந்தரமாக இயக்கம் :
சென்னை திருச்சி ரயில் வழித்தடத்தில் மயிலாடுதுறை ஜங்ஷன் முக்கிய சந்திப்பாக உள்ளது. இங்கு பெருநகரமான சென்னை செல்ல காலை நேரத்தில் ரயில் இல்லாத நிலையில்
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்டர்சிட்டி ரயில் தற்காலிகமாக இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்டர்சிட்டி ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் இன்டர்சிட்டி ரயில் நிரந்தர ரயிலாக இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 5.30மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு மயிலாடுதுறைக்கு வந்த புதிய இன்டர்சிட்டி நிரந்தர ரயிலுக்கு பாஜகவினர் உற்சாக
வரவேற்பு அளித்தனர்.
மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில் பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு முன்னிலையில் பாஜகவினர் புதிய ரயிலை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரயில் நிலைய வாயிலில் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நிரந்தர ரயில் சேவை தந்த பிரதமர், ரயில்வே அமைச்சர், மத்திய இணை அமைச்சர், மாநிலத் தலைவர் உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த ரயில் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும், வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved