news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நெல் கொள்முதல் செய்வதில் பாரபட்சம் என புகார்
tv

Also Watch

நெல் கொள்முதல் செய்வதில் பாரபட்சம் என புகார்

செட்டிக்கொல்லை, தஞ்சாவூர்

54

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Paddy 1

நெல் கொள்முதல் :

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுகாவிற்கு உட்பட்ட நெய்வேலி தென்பாதி செட்டிகொல்லை பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகின்றது.

இங்கு நெய்வேலி தென்பாதி மற்றும் வடபாதி, இடையாத்தி, வாட்டாத்தி கோட்டை உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நெல்லை அரசு கொள்முதல் செய்வதற்கு இந்த கொள்முதல் நிலையத்தையே நம்பி உள்ளனர்.

இன்றைக்கு தற்போது அங்கு 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை ஒரு மாதத்திற்கு மேலாக செட்டிக்கொல்லை கொள்முதல் நிலையத்தில் மலை போல் குவித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு கொள்முதல் செய்யும் செய்யும் பணியை மேற்கொள்ளும் நபர் அவருக்கு வேண்டப்பட்ட நபர்களில் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்வதாகவும், மற்றவர்களின் நெல் மணிகளை கொள்முதல் செய்ய சாக்குகள் பற்றாக்குறை, லாரிகள் வருவதில்லை என பல காரணங்களை சொல்லி தமதிப்பதாகவும் அங்கு நெல்மணிகளை ஒரு மாதத்திற்கு மேலாக குவித்து வைத்துள்ள விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால் கொள்முதல் செய்வதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் பூஞ்சை பூத்தும், அடி பகுதியில் இருக்கும் நெல் மணிகள் முளைக்கவும் தொடங்கி உள்ளதால் நெல் மணிகள் மொத்தமும் வீணாகும் நிலை உள்ளது.

எஞ்சியுள்ள நெல்மணிகளும் முற்றிலும் வீணாவதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நெல் மணிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
பீடம் உடைந்து தேவரின் உருவப்படம் எரிந்து சேதம்

பீடம் உடைந்து தேவரின் உருவப்படம் எரிந்து சேதம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved