தமிழ்நாடு

ஒரு பெண் மற்றும் இரு சிறுமிகள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை

ஒரு பெண் மற்றும் இரு சிறுமிகள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை

 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உத்தாணி ரயில்வே கேட் அருகில்
மயிலாடுதுறையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் அதிவிரைவு ரயிலில் 40 வயது
மதிக்கத்தக்க பெண் 10 மற்றும் 9 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண் குழந்தைகள் என
மூன்று பேர் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டு ரயில் முன் பாய்ந்து
தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு
விரைந்து வந்த கும்பகோணம் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு இறந்தவர்களின்
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு
சென்றனர். மேலும் தற்கொலை செய்து கொண்டவர்கள் யார் ஒரே குடும்பத்தைச்
சேர்ந்தவர்களா எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர்
என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்
முன் பாய்ந்து மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும்
சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

00 Comments

Leave a comment