சென்னை

கலைவாணர் அரங்கம், சென்னை கலைஞரின் வசனம்தான் நடிகர்களின் நுழைவுச்சீட்டு நடிகர் கமல்ஹாசன் மனம் நெகிழ்ந்து பேச்சு| KamalHaasan speaks with emotion


இந்தியாவில் தற்போது ஜனநாயகம், மதசார்பின்மை, சகோதரத்துவம், சமூக நீதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

இதை அரசியல் ரீதியாக நாங்கள் எதிர்கொண்டு தடுப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நான் உட்பட பல நடிகர்களுக்கும் திரைப்படங்களில் அடியெடுத்து வைக்க நுழைவுச் சீட்டாக இருந்தது கருணாநிதியின் வசனம்தான்

- திரைப்படங்களில் முதன்முறை நடிக்க வருபவர்களிடம் கருணாநிதியின் வசனத்தைதான் பேசிக்காட்ட சொல்வார்கள் - நடிகர் கமல்ஹாசன் பேச்சு.

இன்னும் ஏன் திமுகவில் சேரவில்லை என 1989 ல் எனக்கு தந்தி அனுப்பினார் கருணாநிதி, ஆனால் நான் கருணாநிதிக்கு பதிலளிக்கவில்லை - நடிகர் கமல்ஹாசன்


விகடன் குழுமம் சார்பில் ' கலைஞர் 100 - விகடனும் கலைஞரும் ' எனும் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட ,

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

பின்னர் மேடையில் உரையாற்றிய முதலமைச்சர்,

உரிமையோடு கூறிய கோருக்கை உறுதியாக நிறைவேற்றப்படும்

ஆட்சிக்கு முன் நூல்கள் வாங்கிய விசயத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளது

அதனை தற்போது தான் சரிசெய்யப்பட்டுள்ளது

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேர்ந்தெடுக்க தேர்வு குழு விரைவில் அமைக்கப்படுப்

3.5லட்சம் புத்தகங்கள் 50 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது என உறுதி கூறினார்.

கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு 190 உறுப்பினர்களின் பரிந்துரையை பெற்று மூன்றரை லட்சம் புத்தகத்தை , 50 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளோம்.

இங்கு பல பத்திரிகை அதிபர்கள் இருக்கின்றனர், அரசின் நல்ல திட்டங்களை நீங்கள் ஆதரித்து எழுத வேண்டும்.

நல்ல திட்டங்களை ஆதரித்தும் , குறைகள் இருந்தால் விமர்சிக்கும்போதும்தான் அந்த பத்திரிகைகள் மீது உண்மையான மதிப்பு ,

மரியாதை இருக்கும் . நல்ல திட்டங்களை ஆதரிக்காமல் தொடர்ந்து விமர்சனம் மட்டுமே செய்தால் அந்த பத்திரிகைகள் மீது மதிப்பு இருக்காது...

சரியானதை ஆதரித்தும் , விமர்சனத்தை சுட்டிக்காட்டவும் வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பத்திரிகைகள் அவ்வாறு செயல்பட வேண்டும் என மிகுந்த பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இன்று சனநாயகம் , மதசார்பின்மை , சகோதரத்துவம் , சமூக நீதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது ,

இதை அரசியல் ரீதியாக நாங்கள் எதிர்கொண்டு தடுப்போம். ஆனால் அது மட்டும் போதாது,

மணிப்பூர் மாநிலம் 4 மாதமாக எரிகிறது , மணிப்பூரில் நடப்பது குறித்து விகடன் 3 வாரமாக கட்டுரைகளை எழுதியிருக்கிறது.

மணிப்பூரை சென்று பார்த்த எடிட்டர் கில்ட் மீதே அந்த மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

உச்ச நீதிமன்றம் , தேர்தல் ஆணையம் உட்பட அனைத்து அரசியல் சட்ட அமைப்புகளும் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது ,

இந்த சூழலில் ஜனநாயகத்தை காக்கும் பொறுப்பு 4 வது தூணான பத்திரிகைகளுக்கு உள்ளது என கூறினார்.

முன்னதாக பேசிய கமல்ஹாசன்,

" உயிரே...உறவே... தமிழே வணக்கம்...
மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே என தனது உரையை தொடங்கினார்.

ஆலமரத்தின் கீழே வளர்ந்த விருட்சகம் ஸ்டாலின் . தென்னிந்தியாவின் முக்கிய தலைவர் நமது முதல்வர்.

தாழக் கிடப்பவரை தற்காப்பதே தர்மம். கலைஞரின் தர்மம் அசோக சக்கரத்தின் தர்மம்.

கடந்த நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகள் பெரியார் அண்ணா யுகம் என்றால் ,அடுத்த 50 ஆண்டுகள் கருணாநிதியின் யுகம்தான்.

போராடு என்பதே கருணாநிதியின் வாழ்க்கை சொல்லும் செய்தி.

கொள்கைக்காக காதலை தியாகம் செய்த அவரது கதையை நான் சிறுவனாக இருந்தபோதே கேட்டிருக்கிறேன்.

சென்னை பாஷையில் நான் திரைப்படங்களில் பேசி உள்ளேன் ,

12 b பஸ்ஸிலே என்ன திருக்குறள் எழுதியிருக்கு என படத்தில் வசனம் பேசியிருக்கிறேன்.

அப்படி பேசுவோருக்கு கூட தமிழை கொண்டு சேர்த்தார்.

காந்திக்கு அடுத்தபடியாக பல பக்கங்களை எழுதிய ஒரே அரசியல் தலைவர் கருணாநிதி.

மாடர்ன் திரையரங்கில் அவர் எழுதிய வசனத்தின் காகிதத்தை பாதுகாத்து வருகின்றனர் ,

அதை பார்த்துவிட்டு அதில் உள்ள வசனம் குறித்து கருணாநிதியிடம் நான் கூறியிருக்கிறேன்.

திரைப்படத்தின் எழுத்தாளராக இருந்து , இயக்குநர் மனம் புண்படாமல் அவர் தனது கருத்தை இயக்குநருக்கு கொண்டு சேர்த்துள்ளார்.

Express வேகத்தில் திரைப்பட வசனம் எழுதுபவர் கருணாநிதி.

69 ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய வசனம் இன்னும் எனக்கு நினைவில் உள்ளது.

நான் உட்பட பல நடிகர்களுக்கும் அவரது வசனம்தான் Gate pass ,

முதன் முதலில் நடிக்க வருபவர்களிடம் வாய் சுத்தமாக இருக்கிறதா என பார்க்க கருணாநிதியின் வசனத்தைத்தான் பேசிக் காட்ட சொல்வார்கள்.

இத்தாலிய எரிமலைக் குழம்பில் செய்த பேனாவை நான் அவருக்கு பரிசளித்தேன்.

மருதநாயகம் பட விழவில் கலைஞானி என பட்டம் வழங்கினார் ,

தசாவதாரம் படம் எடுக்கும்போது மங்குரோவ் அழிவு குறித்து காட்சி வைத்திருப்பதாக அவரிடம் கூறினேன் ,

ஆனால் அது மக்களுக்கு புரியாது என்பதால் அதை மாற்றிவிட்டு , மக்களுக்கு புரியும் வகையில் மணற் கொள்ளை குறித்து படத்திற்கு எழுத சொன்னார் .

படம் வெளிவந்த பிறகு என் முகத்தில் கிள்ளி வாழ்த்து தெரிவித்தார்.

1989 ல் திமுகவில் ஏன் இன்னும் சேரவில்லை என எனக்கு தந்தி அனுப்பினார் அவர் .

எனக்கு பயம் , தயக்கத்தால் பதில் சொல்லாமலே இருந்து விட்டேன் ,

ஆனால் என் நிலைமையை புரிந்து கொண்டு ஏன் பதில் தரவில்லை என்ற கேள்வியை என்னிடம் அவர் ஒருபோதும் கேட்கவே இல்லை.

விஸ்வரூபம் பட பிரச்சனையின்போது திமுக உன்னுடன் எப்போதும் இருக்கும் என்று கூறினார் , எப்போது வேண்டுமானாலும் என்னிடம் வா என்று கூறினார்.

ஸ்டாலின் எனும் ஆலமரத்தடியில் இன்னொரு மரம் உருவாகியுள்ளது என கூறினார்.

00 Comments

Leave a comment