தமிழ்நாடு

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டின் வடக்கு உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும், ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 – 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் வெப்ப அலை வீசியது. அதிகபட்சமாக சேலத்தில் 108.14 டிகிரி, ஈரோட்டில் 107.6 டிகிரி, திருப்பத்தூரில் 106.8 டிகிரி, கரூர் பரமத்தி மற்றும் வேலூரில் 106.7 டிகிரி, தர்மபுரி மற்றும் மதுரை நகர்ப்பகுதியில் 105.8 டிகிரி, நாமக்கல்லில் 104.9 டிகிரி, திருச்சியில் 104.18 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 100.9 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால், தென் மாவட்டங்கள், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

00 Comments

Leave a comment