தமிழ்நாடு

சென்னை வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

சென்னை வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ  விபத்து

சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இயங்கி வரும் உணவகத்தில், கேஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததில் பிரிட்ஜ் மற்றும் குக்கர் வெடித்து சிதறி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளத்தில் வசித்து வரும் பார்வதி, கடந்த 11 ஆண்டுகளாக அம்மாச்சி குழம்பு கடை என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். உணவக ஊழியர் சரவணன் காலையில் வழக்கம் போல் அடுப்பு பற்ற வைத்த போது, கேஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்த நிலையில், ஹோட்டல் முழுவதும் தீ பரவி பிரிட்ஜ் மற்றும் குக்கர் வெடித்து சிதறியது. தகவலறிந்து அசோக் நகர், கோயம்பேடு பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

00 Comments

Leave a comment