news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews 16-வது நாளாக தொடர் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

16-வது நாளாக தொடர் போராட்டம்

கிருஷ்ணகிரி

61

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
kri main

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி 16 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், தொடர்ந்து அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் அண்ணா சிலை முன்பு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1

அங்கன்வாடி சத்துணவு பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 19,500 சம்பளம் வழங்க வேண்டும்,

சமையலர் உதவியாளருக்கு அலுவலக உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்

அரசு துறை காலி பணியிடங்களை நிரப்பும்போது 10 ஆண்டு பணி முடித்த தகுதியுள்ள அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களை 50% ஈர்க்க வேண்டும்

அங்கன்வாடி, சத்துணவு திட்டங்களில் உள்ள 60,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

தேசிய மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்

அரசு ஊழியர்களுக்கு இருப்பது போல் மகப்பேறு விடுப்பு 12 மாதம், மாதவிடாய் கால விடுப்பு, தற்செயல் விடுப்பு 12 நாட்களை மொத்தமாக அனுபவிக்கும் உரிமை வழங்க வேண்டும்


என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த கோரிக்கைகள் குறித்து சங்க தலைவர்களை அழைத்துப் பேச வேண்டும் என்றும் இல்லை என்றால் நாட்டை விட்டு வெளியேறுங்கள் எனவும் கோஷங்களை எழுப்பினர்.

சத்துணவு பணியாளர்களை குண்டு கட்டாக கைது

இதை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களை குண்டு கட்டாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மூச்சு விட முடியாமல் திணறிய தொழிலாளர்கள்

0
2 mins agoshare
TVL Gas issuebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved