கறிக்கோழி பண்ணை விவசாயிகள் தரப்பில் வைக்கப்படும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 300-க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகள் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் 49 நாட்களைக் கடந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகள் வாழ்வாதார உரிமைகளை மீட்க கோரி, உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என்ன என்ன கோரிக்கைகள் ? 1. தமிழ்நாடு அரசு, கறிக்கோழி நிறுவனங்கள், கறிக்கோழி பண்ணை விவசாய சங்கங்களை உள்ளடக்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு அடிப்படை கூலியாக கிலோவுக்கு 20 ரூபாயும், பண்ணை நாட்டுக்கோழி வளர்ப்பிற்காக 25 ரூபாயும், காடை வளர்ப்பில் ஒரு காடைக்கு 7 ரூபாயுமாக நிர்ணயிக்க வேண்டும். 2. முத்தரப்பு கூட்டம் ஆண்டுதோறும் நடத்தி கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்.3. FCR எனப்படும் தவறான வளர்ப்பு கூலி நிர்ணயம் செய்யும் முறையை உடனடியாக நீக்க வேண்டும்.4. கறிக்கோழி பண்ணைகளுக்கு கட்டணம் இல்லாமல் தமிழ்நாடு அரசு மின்சாரம் வழங்க வேண்டும். சூரிய மின் உற்பத்தி செய்யும் பண்ணையாளர்களுக்கு அரசாங்கம் யூனிட் டு யூனிட் அடிப்படையில் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் எந்த கட்டண வித்தியாசமும் இருக்கக்கூடாது. 5. கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும். 6. விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். Related Link கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.